பங்குச் சந்தையில் நேற்று ஒரு பென்னி பங்கு 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பென்னி பங்கு, லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவனம். 2007ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தனது சொந்த மான்டீல் பிராண்ட் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆயத்த ஆடைகளை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் தனது பிரத்யேக கடைகள் மற்றும் ஆன்லைன் வாயிலாகவும் செமி ஃபார்மல் மற்றும் கேஷ்வல் ஆடைகளை விற்பனை செய்கிறது.
ஆடை உற்பத்தி
மேலும், லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவனம் சில ஆடை உற்பத்திக்கு மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களையும் பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறன் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் 68 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.21.27 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அந்த காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1.62 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

2024 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாதங்களில், லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.49.50 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் இதே காலத்தில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.12.41 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் நிகர லாபம் 149 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மல்டிபேக்கர் பங்கு
நீண்ட கால அடிப்படையில் லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 832 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 4,013 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.
2024 செப்டம்பர் 19ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக்தின இடையே லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.35.90ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வந்தது. கடந்த 9ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.8.45க்கு சென்றது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் காண தொடங்கியது.
அப்பர் சர்க்கியூட்
மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று லோரென்சினி அப்பரல்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 4.91 சதவீதம் அப்பர் சர்க்கியூட் ரூ.9.40ல் முடிவுற்றது. இந்நிலையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் ரூ.9.87ல் முடிவுற்றது. தொடர்ந்து 2வது வர்த்தக தினமாக இப்பங்கின் விலை உயர்ந்ததால் பங்குச் சந்தையில் அனைவருது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வருவாய். லாபம் அமோகம்... இந்தா வாங்கிக்கோங்க.. பார்தி ஏர்டெல் செய்த தரமான சம்பவம்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications