நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் பார்தி ஏர்டெல். இந்நிறுவனம் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் மற்றும் வருவாய் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.11,022 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 432 சதவீதம் அதிகமாகும்.
சரிசெய்யப்பட்ட லாபம்
இருப்பினும், விதிவிலக்கான பிரிவுகளுக்கான சரிசெய்யப்பட்ட லாபம் ரூ.5,223 கோடியாக இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 77 சதவீதம் அதிகாகும் என்று பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.

2025 மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் வருவாயாக ரூ.47,876 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் வளர்ச்சியாகும். இந்தியாவில் வலுவான அடிப்படை உந்துதல், ஆப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்ட நாணய வருவாய் வளர்ச்சி மீட்சி மற்றும் இண்டஸ் டவர்ஸ் ஒருங்கிணைப்பின் முழு காலாண்டு தாக்கம் ஆகியவற்றால் வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என்று பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிடெண்டு
நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளதையடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு அறிவித்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.16 இறுதி டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனர் வாயிலான சராசரி வருவாய் ரூ.245ஆக அதிகரித்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் ரூ.209ஆக இருந்தது. பார்தி ஏர்டெல் போஸ்ட்பெய்டு பிரிவில் தனது தலைமைத்துவ நிலையை தக்க வைத்துக் கொண்டது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர சேர்க்கை 6 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் மொத்த போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.59 கோடியாக உயர்ந்துள்ளது.
ஃபைபர் சேவை
பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் சுமார் 3,300 டவர்கள் மற்றும் 13,600 மொபைல் பிராட்பேண்ட் நிலையங்களை நிறுவியது. இது இந்நிறுவனத்தின் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும், நாடு முழுவதும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் உதவியது. இந்நிறுவனம் 44,000 கி.மீ தொலைவுக்கு ஃபைபர் சேவையை வழங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.74 சதவீதம் குறைந்து ரூ.1,820.95ல் முடிவுற்றது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளின தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்வீட் எடு கொண்டாடு.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க அதிக வாய்ப்பு.. எப்படி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications