ஒரு பங்கிற்கு ரூ.45 ஈவுத்தொகை.. முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முன்னணி ஐடி நிறுவனம்..!

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களுடைய லாபத்தில் கிடைக்கும் ஒரு தொகையை ஒரு பங்கிற்கு இவ்வளவு என ஈவுத் தொகையாக முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.

இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இருக்கக்கூடிய எல்டிஐ மைண்ட் ட்ரீ (LTIMindtree) நிறுவனம் தங்கள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 45 ரூபாய் என்ற அளவில் ஈவுத்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1, 35, 661 கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பு கொண்ட நிறுவனமாக எல்டிஐ மைண்ட் ட்ரீ இருக்கிறது. இந்நிறுவனம் 2025 ஆம் நிதி ஆண்டுக்கான தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகை குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஒரு பங்கிற்கு ரூ.45 ஈவுத்தொகை.. முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முன்னணி ஐடி நிறுவனம்..!

இது தொடர்பாக பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தங்கள் வாரியக் குழு இயக்குனர்கள் 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கிற்கும் தலா 45 ரூபாய் ஈவுத் தொகை வழங்குவதற்கு அனுமதி தந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகை பெறுவதற்கான ரெக்கார்டு தேதியாக மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ஆம் தேதிக்கு பிறகு உள்ள 10 அலுவல் நாட்களுக்குள் ஈவுத் தொகையானது முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

2024 ஆம் ஆண்டு எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 65 ரூபாய் வழங்கியது , 2023 ஆம் ஆண்டு 80 ரூபாய் ஈவுத் தொகை வழங்கியது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1128 கோடியாக இருக்கிறது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் 1100 கோடி ரூபாய் லாபம் பெற்றிருந்தது.

மொத்தமாக 2024 ஆம் நிதி ஆண்டில் எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் லாபம் 4585 கோடி ரூபாய், 2025ஆம் தேதி ஆண்டில் அது 4602 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் வருமானம் என்பது 9,771 கோடி ரூபாயாக இருக்கிறது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,893 கோடி ரூபாயாக இருந்தது. எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்கு மதிப்பு மே 8ஆம் தேதி 4,645 ரூபாய் என வர்த்தகமானது.

இந்த நிறுவன பங்குகளில் 68 சதவீதம் பிரமோட்டர்கள் வசம் இருக்கிறது. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 10. 36 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. சில்லறை முதலீட்டாளர்கள் 8 சதவீத பங்குகளையும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 7 சதவீத பங்குகளையும் சொந்தமாக வைத்திருக்கின்றன.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

FAQs
2024 ஆம் ஆண்டு எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் எவ்வளவு ஈவுத்தொகை வழங்கியது?

2024 ஆம் ஆண்டு எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 65 ரூபாய் ஈவுத்தொகை வழங்கியது.

எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு ஈவுத்தொகை வழங்குகிறது?

எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு தலா ரூ.45 என ஈவுத்தொகை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எல்டிஐ மைண்ட் ட்ரீ நிறுவனம் எந்த துறையில் செயல்படுகிறது?

எல்டிஐ மைண்ட் ட்ரீ என்பது இந்தியாவை சேர்ந்த முன்னணி ஐடி சேவை நிறுவனம் ஆகும். 

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+