மும்பை: இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியில் இருக்கின்றன. இதனால் அம்பானி ,அதானி, டாடா என இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் பல மடங்கு சரிவடைந்து அவற்றின் சந்தை மூலதனம் மதிப்பில் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளன.
கடந்த ஐந்து மாதங்களாகவே இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறிய வண்ணம் இருக்கின்றன. இதனால் பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவடைந்திருக்கிறது என்பது மட்டும் இல்லாமல் பங்குச்சந்தையை தாங்கி நின்ற பெரிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும், சந்தை மூலதன மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளன. கேபிடல் மார்க்கெட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து தற்போது வரை இந்தியாவில் சந்தை மூலதன அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருந்த நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பிலிருந்து மொத்தமாக 28 லட்சம் கோடி ரூபாய் காணாமல் போய் இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 474 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, அதுவே மார்ச் 3ஆம் தேதி 384 லட்சம் கோடி ரூபாய் என குறைந்திருக்கிறது. அதாவது ஐந்து மாதங்களில் 90 லட்சம் கோடி ரூபாயை நிறுவனங்கள் இழந்து இருக்கின்றன. இதில் கடந்த 5 மாத காலத்தில் டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் 7.70 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பிலும் 5.75 லட்சம் கோடி ரூபாய் காணாமல் போய் இருக்கிறது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பிலிருந்து 5.3 லட்சம் கோடி ரூபாய் குறைந்து இருக்கிறது. அதேபோல ஐடிசி நிறுவனம் 1.52 லட்சம் கோடி , பாரதி ஏர்டெல் 1 லட்சம் கோடி மற்றும் பஜாஜ் நிறுவனம் 1.32 லட்சம் கோடி, எல்& டி நிறுவனம் 1.27 லட்சம் கோடி என அனைத்து நிறுவனங்களுமே கணிசமான தொகையை இழந்திருக்கின்றன.
டாடா குழும பங்குகளை பொறுத்தவரை டிசிஎஸ் நிறுவனம் தான் பெரிய அளவில் அடிவாங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பில் 2.8 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் 1.30 லட்சம் கோடி ரூபாயும், டாடா ஸ்டீல் 37,000 கோடி ரூபாயும், டைட்டன் நிறுவனம் 65,000 கோடி ரூபாயும் இழந்திருக்கின்றன.
அதானி குழுமத்தை பொறுத்தவரை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 1.13 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது. சந்தை மூலதன மூலதன மதிப்பு குறைந்து இருப்பதன் அடிப்படையில் பார்க்கும்போது அதானி குழுமத்திலேயே அதிகபட்சமாக அதானி கிரீன் நிறுவனம் 1.74 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது. அதானி போர்ட் 85,000 கோடி ரூபாயையும், அதானி பவர் 64,000 கோடி ரூபாயையும் இழந்திருக்கின்றன.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களை பார்க்கும்போது அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4.14 லட்சம் கோடி ரூபாயை சந்தை மூலதன மதிப்பிலிருந்து இழந்திருக்கிறது, ஜியோ பைனான்சியல் நிறுவனமும் சந்தை மூலதன மதிப்பிலும் 95,000 கோடி ரூபாய் இழந்திருக்கிறது.
இந்திய பங்குச்சந்தைகள் தற்போது திருத்தத்தில் இருப்பதாக கூறும் பங்குச்சந்தை நிபுணர்கள் அடுத்த சில மாதங்களில் சந்தை மீண்டு வரும் என்றும் அப்போது இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பும் , சந்தை மூலதன மதிப்பும் உயரும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Story written:Devika
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications