அழகு மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மாமார்த் பிராண்டின் தாய் நிறுவனமான ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இன்று தொடங்கியது, நவம்பர் 2ஆம் தேதி நிறைவடையும்.
சோமேட்டோ, பேடிஎம் ஐபிஓ தடுமாற்றத்திற்கு பின்பு நீண்ட தாமதத்திற்கு பின்பு ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் ஐபிஓ இன்று தொடங்கியது. இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக அந்த நிறுவனத்தின் நிதி நிலை எப்படி இருக்கு என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம் லாப திறன் விஷயத்தில் சற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது.

ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் 2023 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.24.71 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.151 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. அதேசமயம் வருவாய் வளர்ச்சியில் நல்ல வலுவாகவே இருக்கிறது.
மேலும், ரூ.8 ஆயிரம் கோடி வர்த்தக நிறுவனமாக வளரும் அளவுக்கு ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நல்ல நிலையில் உள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். புதிய பங்கு வெளியீட்டில் 4.12 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மொத்தம் ரூ.365 கோடி திரட்ட ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.
புதிய பங்கு வெளியீட்டுக்கான பங்கின் விலை ரூ.308-324 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ. அடிப்படை விலை பங்கின் முகமதிப்பை காட்டிலும் 30.80 மடங்கு அதிகமாகும்.
இந்நிறுவன ஐபிஓ-வில் குறைந்தபட்சம் 46 பங்குகள் மற்றும் அதன் பிறகு 46 பங்குகளின் மடங்குகளில் பங்கு கோரி விண்ணப்பிக்கலாம். அதேசமயம் சில்லரை முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 598 பங்குகளுக்கு (ரூ.1.93 லட்சம்) மேல் கோர முடியாது. ஏனென்றால் புதிய பங்கு வெளியீட்டில் ரூ.2 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
இந்நிறுவனத்தின் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.30 தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ வரும் வியாழக்கிழமை (நவ.2ம் தேதி) நிறைவடையும்.
குருகிராமை சேர்ந்த கஜல்-வருண் அலக் தம்பதியனர் தங்களது குழந்தைக்கு நச்சு இல்லாத பொருட்களை பயன்படுத்த விரும்பினர். ஆனால் எங்கும் தேடியும் நச்சு இல்லாத பொருட்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து அதை அவர்களே தயாரிக்க முடிவு செய்ததன் விளைவாக 2016ல் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர். இதில் பாதுகாப்பு, இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் நேர்மை ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனத்தை அவர்கள் தொடங்கினர்.
ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் முதலில் மாமார்த் என்ற பிராண்ட் பெயரில் நச்சு இல்லாத குழந்தை பாராமரிப்பு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனையடுத்து தி டெர்மோ கோ, அக்வாலாஜிகா, ஆயுகா, பிபிலண்ட் மற்றும் டாக்டர் ஷெத்ஸ் ஆகிய 5 பிராண்டுகளை உருவாக்கினர்.
இன்று அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. 2022 ஜனவரியில் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம் யூனிகார்ன் கிளப்பில் இடம் பிடித்தது, ஸ்டார்ட்அப் சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications