கடந்த வாரத்தில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, சென்செக்ஸ் 1,090.21 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.89% அதிகரித்து, 58,786.67 புள்ளிகளாகவும். நிஃப்டி 50 314.60 புள்ளிகள் அல்லது 1.83% அதிகரித்து, 17,511.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இது பரவி வரும் ஒமிக்ரான், பணவீக்கம், அமெரிக்க ஃஃபெடரல் வங்கியின் வட்டி விகித மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.
இது வரவிருக்கும் வாரத்தில் ஓமிக்ரான், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன.
ஐபிஓ-க்கள்
மெட்பிளஸ் ஹெல்த்கேர் சர்வீசஸ், டேட்டா பேட்டர்ன்ஸ், ஹெச்.பி அட்ஹெசிவ்ஸ் மற்றும் சுப்ரியா லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 4 ஐபிஓ-க்கள் நடப்பு வாரத்தில் வெளியாகவுள்ளன.
இதே சிஇ இன்ஃபோ சிஸ்டம்ஸ், மெட்ரோ பிராண்ட்ஸ் ஏற்கனவே தங்களது பங்கு வெளியீட்டினை தொடங்கியுள்ளன. இது நடப்பு வாரத்தில் டிசம்பர் 13 மற்றும் 14 அன்று முடிவடையவுள்ளது.
பங்கு சந்தையில் பட்டியல்
வரும் வாரத்தில் மூன்று பங்குகள் பட்டியலிடப்படவுள்ளன. ஒன்று தேகா இண்டஸ்ட்ரீஸ், ஆனந்த் ரதி வெல்த், ரேட்கெயின் டிராவல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் டிசம்பர் 14 மற்றும் டிசம்பர் 17 அன்று பட்டியலிடப்படவுள்ளன.
பொருளாதார தரவுகள்
சிபிஐ தரவு, மொத்த விலை பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் வெளியாகவுள்ளன. அக்டோபர் மாதத்திற்காக நுகர்வோர் விலை குறியீடு 5 - 4.48% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிகரித்து வரும் உணவு பொருட்கள் விலைவாசி, எரிபொருட்கள் விலை, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
FOMC கூட்டம்
சர்வதேச அளவில் FOMC கூட்டத்தினை கவனித்துக் கொண்டுள்ளன. நிபுணர்கள் பணவீக்கமானது அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில், பத்திரம் வாங்குதலை விரைவில் குறைக்கலாமென எதிர்பர்க்கப்படுகிறது. இதற்கிடையில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய முடிவுகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெடரல் வங்கி மட்டும் அல்ல, ஸ்விஸ் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் ஜப்பான், பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய முதலீடுகள்
நவம்பர் 16 நிலவரப்படி, அன்னிய முதலீடுகள் 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் கண்டுள்ளது.
ஓமிக்ரான் அச்சம்
உருமாற்றம் அடைந்து பரவி வரும் ஓமிக்ரான் தாக்கம் தொடர்ந்து பல நாடுகளில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் 33 பேர் தாக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சற்று தாக்கத்தினை மிதப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தாக்கம் எப்படி இருப்பது என தெரியலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெக்னிக்கல் பேட்டர்ன்
நிஃப்டி தற்போது 17,000 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது கடந்த இரு முறையாக 16,900 என்ற லெவலை தொட்டது. எனினும் முடிவில் தொடர்ந்து மேலாக வர்த்தகமாகி வருகின்றது. தற்போது டபுள் பாட்டம் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில் வரும் வாரத்தில் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 17,500 - 17,615 என்ற லெவலை தொடலாம்.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications