ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் லாப அளவுகளை அதிகரிக்க முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் அதிக வருவாய் தரும் பரிவில் அதாவது கோர் வர்த்தகப் பிரிவிலும் இதனைச் சேர்க்கும் அளவிற்கு டெலிகாம், ரீடைல் பிரிவுகளை மெருகேற்ற தவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 8 நாட்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தக முடிவில் RIL பங்குகள் 1.24 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 19.41 புள்ளிகள் சரிந்து 35,443.67 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 0.70 புள்ளிகள் சரிந்து 10,767.65 புள்ளிகள் குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா அதிரடியாக 8.13 சதவீதம் உயர்ந்து அசத்தியுள்ளது, இதேபோல் டாக்டர் ரெட்டி நிறுவனம் 4.92 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், கோட்டாக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்போசிஸ், ஓஎன்ஜிசி ஆகியவை கணிசமான உயர்வை சந்தித்தது.
மேலும் பவர் கிரிட், எச்டிஎப்தி, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை அடைந்தது.


Click it and Unblock the Notifications