டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அந்த ஒரு பிரைம்-டைம் உரை, இந்திய பங்குச் சந்தையை உலுக்கி எடுத்து வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தலால் ஸ்ட்ரீட் ரத்தக் களறியானது. டிரம்ப்பின் ஒவ்வொரு வார்த்தையும் முதலீட்டாளர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க, சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டும், நிஃப்டியும் 400 புள்ளிகளை கடந்து தடம் புரண்டு காணப்படுகிறது. ஈரான் மீதான போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த திடீர் வீழ்ச்சி எதை காட்டுகிறது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? தற்போதைய நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

சென்செக்ஸ், நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் கடந்த வர்த்தக தினத்தில் கிட்டத்தட்ட 2% ஏற்றம் கண்டிருந்தன. ஆனால் அந்த சந்தோசமானது ஒரு நாள் கூட முழுவதுமாக நீடிக்கவில்லை. இன்று காலை 10.06 மணி நேர நிலவரப்படி சென்செக்ஸ் 1532.38 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளன. நிஃப்டி 479.85 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 22,199.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இதனிடையே 910 பங்குகள் ஏற்றத்திலும், 2545 பங்குகள் சரிவிலும், 142 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமலும் காணப்படுகின்றன. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து முறையே 16% மற்றும் 17% என்னும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. மற்ற அனைத்து முக்கிய 16 குறியீடுகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக நிதியியல் மற்றும் வங்கி துறையானது 1.6% வீழ்ச்சி கண்டும், ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் மிட் கேப் பங்குகள் முறையே 1.5% மற்றும் 1.2% வீழ்ச்சி கன்டுள்ளன.

Also Read

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய அமெரிக்க அதிபரின் உரையே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படும் நிலையில், அதற்கான எந்த தெளிவான அறிவிப்புகளோ, ஒப்பந்தங்களோ இல்லை. மாறாக டிரம்ப் இன்னும் பிரச்சனை அதிகரிக்கலாம் எனும் விதமாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எச்சரித்துள்ளார். இது மேற்கொண்டு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து அதிகரிக்க வழிவகுக்கலாம்.

Recommended For You

இது இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை பதம் பார்க்கலாம். பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ரூபாயின் மதிப்பும் பாதாளம் நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனிடையே அன்னிய முதலீடுகள் சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்த சமயத்தில் இந்தியா விக்ஸ் குறியீடும் 5% மேலாக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகம் இருக்கும் என்பதையே காட்டுகிறது. ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+