இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து கடந்த வாரத்தில் 4 அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலும் சரிவிலேயே காணப்படுகின்றது.
முன்னதாக 1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ், இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகின்றது.
இது நடப்பு வாரத்தில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் தொடர்ந்து சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது...
1900 புள்ளிகளுக்கு மேல் சரிவு
குறிப்பாக 2.17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1954 புள்ளிகள் அல்லது 3.31% வீழ்ச்சி கண்டு 57,082.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 492.80 புள்ளிகள் அல்லது 3.3% சரிவினைக் கண்டு, 17022.75 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ கன்சியூமன்ஸ் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட இன்டெக்ஸ்கள் அதிகபட்சமாக 5% சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி பிஎஸ்இ, சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்எம் சிஜி, நிஃப்டி ஆட்டோ, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஓஎன் ஜி சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால் கோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம், டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
2.46 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1918.54 புள்ளிகள் அல்லது 3.25% குறைந்து, 57,118.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 576.5 புள்ளிகள் அல்லது 3.27% குறைந்து, 17040.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications