மத்திய பட்ஜெட் பாசிட்டிவாக இருந்தபோதிலும், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவை கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்தது. குறிப்பாக தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் வீழ்ச்சி கண்டது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக உள்ள இந்த சூழ்நிலையில் பங்குகளில் முதலீடு செய்வது சரிதானா அல்லது எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்த ஒரு தெளிவற்ற மனநிலையில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமையன்று பங்குச் சந்தையில் ரூ.100க்கு குறைவான மதிப்புடைய சில பங்குகளை வாங்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், என்எம்டிசி ஸ்டீல் மற்றும் பிஎல் காஷ்யப் அண்ட் சன்ஸ் ஆகிய பங்குகளை வாங்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய ஆப்ரேட்டர் ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ். இந்நிறுவன பங்கினை ரூ.74.20 என்ற விலையில் வாங்கலாம். பங்கின் இலக்கு விலை ரூ.78 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.72 என எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவா தெரிவித்தார்.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.17 சதவீதம் குறைந்து ரூ.74.54ஆக இருந்தது.
நாட்டின் மிகப்பெரிய இரும்பு தாது உற்பத்தியாளரான என்எம்டிசி ஸ்டீல் பங்குகளை ரூ.39.90 என்ற விலையில் வாங்கலாம், இப்பங்கின் இலக்கு விலை ரூ.43ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.38.40 என சுகந்தா சச்தேவா தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.91 சதவீதம் சரிந்து ரூ.40.25ஆக இருந்தது.
லட்சுமி ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் அண்ட் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி தலைவர் அன்ஷுல் ஜெயின், ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் மற்றும் கட்டுமான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிஎல் காஷ்யப் அண்ட் சன்ஸ் பங்கினை ரூ.61 என்ற விலையில் வாங்கலாம், இப்பங்கின் இலக்க விலை ரூ.66 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.59 என கணிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.46 சதவீதம் குறைந்து ரூ.61.10ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications