சந்தை தடுமாற்றத்தால் சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவு..!
பேங்க் ஆப் ஜப்பான் நாணய கொள்கையில் நிலையான நிலையை அறிவித்தாலும், பிரகாசமான பொருளாதாரத்தை காண்பித்ததாலும் ஆசிய சந்தை கலவையான நிலையில் முடிந்தது.
வர்த்தகம் துவங்கும் போது ஏற்றத்துடன் இருந்த நிலையில் ஆசிய சந்தை தடுமாற்றத்தால் சரிவுடன் முடிவடைந்தது.

பேங்க் ஆப் ஜப்பான் நாணய கொள்கையில் நிலையான நிலையை அறிவித்தாலும், பிரகாசமான பொருளாதாரத்தை காண்பித்ததாலும் ஆசிய சந்தை கலவையான நிலையில் முடிந்தது.
சென்செக்ஸ் 66.72 புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் சரிந்து 26,307.98 புள்ளிகளுடன் முடிவடைந்தது. நிப்டி 21.95 புள்ளிகள் அதாவது 0.27 சதவீத சரிவுடன் 8082.40 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
இன்று பங்குகளின் விலையில் டிசிஎஸ் 2.08 சதவீதமும், எண்டிபிசி 1.09 சதவீதம், கோல் இந்தியா 1.01 சதவீதமும், ஐடிசி 0.99 சதவீதமும், விப்ரோ 0.89 சதவீதமும் உயர்ந்தது.
அதே நேரம் எஸ்பிஐ 2.2 சதவீதமும், பஜாஜ் ஆடோ 2.13 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.04 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.86 சதவீதமும், லூபின் 0.89 சதவீதமும் பங்குகளின் விலையில் சரிந்தது.


Click it and Unblock the Notifications