விநாயகர் சதுர்த்தி.. இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

எனினும் கொரோனா காரணமாக இந்த ஆண்டும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களை பாடாய்படுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், மூன்றாம் அலையின் அச்சம் இருந்து வருகின்றது. ஆக பல மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி கொடுத்துள்ளன.

பங்கு சந்தைகளுக்கு விடுமுறை

பங்கு சந்தைகளுக்கு விடுமுறை

உண்மையில் மக்கள் தங்களது பாதுகாப்பு காரணம் கருதி பொறுமையுடன் இருப்பது மிக அவசியமான விஷயமே. மக்களின் பாதுகாப்பு கருதி அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும் ஒரு வகையில் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகளுக்கும் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கமாடிட்டி சந்தை காலை அமர்வு விடுமுறை

கமாடிட்டி சந்தை காலை அமர்வு விடுமுறை

இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அதே நேரம், இந்திய எம்சிஎக்ஸ் சந்தைக்கு காலை அமர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மாலை அமர்வு உண்டு. இது மாலை 5 மணிக்கு தொடங்கி வழக்கம் போல 11,30 மணிக்கு முடிவடையும். ஆக காலை அமர்வில் இருக்கும் ஏற்ற இறக்கம் மாலை அமர்வில் எதிரொலிக்கலாம் என்பதால் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

மற்ற விடுமுறை நாட்கள்

மற்ற விடுமுறை நாட்கள்

இது தவிர அக்டோபர் 15 தசரா பண்டிகையை முன்னிட்டும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 4 அன்று தீபாவளி லட்சுமி பூஜையும்., நவம்பர் 5 தீபாவளி பாலிபிரதிபாதாவும், டிசம்பர் 19 அன்று குருநானக் ஜெயந்தியும் அனுசரிக்கப்படுவதால், அன்றும் பங்கு சந்தைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

ஏற்கனவே கடந்த சில தினங்களாகவே இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இதற்கிடையில் இன்று விடுமுறையாதலால் இதன் தாக்கம் திங்கட்கிழமையன்று சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட பங்கு சந்தை விடுமுறை நாட்களில், எம்சிஎக்ஸ் சந்தையும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாலை அமர்வுகள் வழக்கம்போல எம்சிஎக்ஸ் சந்தையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

கவனமாக கொண்டாடுங்கள்

கவனமாக கொண்டாடுங்கள்

கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க வேண்டும் என, அரசு ஒரு புறம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. எனினும் அதனை மக்கள் சரியாக கடைபிடித்தால் மட்டுமே மூன்றாம் அலை வராமல் தடுக்க முடியும். ஆக மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடித்து, இந்த விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடலாம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+