இந்தியாவில் இன்று கொண்டாடப்படும் குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்திய கமாடிட்டி வர்த்தக சந்தையான எம்சிஎக்ஸ்-ல் மாலை அமர்வு உண்டு.
நாட்டின் முக்கியமான மதங்களில் ஒன்று சீக்கிய மதம். இந்த மதத்தினை தோற்றுவித்தவர் தான் குரு நானக் ஜெயந்தி. இவரின் பிறந்த நாளை தான், குரு நானக் ஜெயந்தியாக இந்தியா முழுவதும் உள்ள சீக்கிய மக்கள் கொண்டாடுகின்றனர்
இது வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு தான் இந்திய பங்கு சந்தைகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆக தேசிய பங்கு சந்தை நிஃப்டி மற்றும் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று வர்த்தகம் நடைபெறாது. நாளை வழக்கம்போல சனிகிழமை என்பதால் விடுமுறை. ஞாயிற்றுகிழமையும் விடுமுறையாகும். ஆக திங்கட்கிழமையன்று தான் ஒட்டுமொத்த தாக்கமும் இருக்கும்.
ஆக திங்கட்கிழமையன்று அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தான் நடப்பு காலண்டர் ஆண்டில் பங்கு சந்தைகளுக்கும், கமாடிட்டி சந்தைக்கும் அளிக்கப்பட்டுள்ள கடைசி விடுமுறையாகும். டிசம்பர் மாதத்தில் எந்த விடுமுறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Market updates.. Market Holiday: BSE, NSE to remain close today on account of Guru NanaK Jayanti./ குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு!


Click it and Unblock the Notifications