இந்தியாவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு இந்திய மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு என இரண்டிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழகம் புதுச்சேரியில் நாளைதான் ரமலான் விடுமுறை கொண்டாடப்பட உள்ளது. எப்படியிருப்பினும் நாளை வழக்கம்போல பங்கு சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தவிர இனி அடுத்து வரவிருக்கும் மாதங்களில் ஜூலை 21 அன்று பக்ரீத் காரணமாக விடுமுறை தினமாகவும், ஆகஸ்ட் 19 அன்று முகரம் காரணமாகவும், செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி அன்று, அக்டோபர் 15 தசரா பண்டிகையை முன்னிட்டும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர நவம்பர் 4 அன்று தீபாவளி லட்சுமி பூஜையும்., நவம்பர் 5 தீபாவளி பாலிபிரதிபாதாவும், டிசம்பர் 19 அன்று குருநானக் ஜெயந்தியும் அனுசரிக்கப்படுவதால், அன்றும் பங்கு சந்தைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய சந்தைகள் கொரோனா காரணமாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இதற்கிடையில் இன்று விடுமுறையாதலால் இதன் தாக்கம் நாளை சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல எம்சிஎக்ஸ் கமாடிட்டி சந்தைக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மாலை அமர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பங்கு சந்தை விடுமுறை நாட்களில், எம்சிஎக்ஸ் சந்தையும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாலை அமர்வுகள் வழக்கம்போல எம்சிஎக்ஸ் சந்தையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தினை எப்படியாவது ஒழித்துகட்டிட வேண்டும் என அரசு ஒரு புறமும், மக்கள் ஒரு புறம் அல்லாடி வருகின்றனர். ஆனால் கொரோனா எதற்கும் பிடி கொடுக்காது மூன்றாம் அலை, நான்காம் அலை என உருமாறிக் கொண்டே போய்க் கொண்டே இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடித்து இந்த நாளை கொண்டாடலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications