நிஃப்டி 10599 புள்ளிகளில் நேற்று 259 புள்ளிகள் இறங்கி வர்த்தகம் முடிந்தது. நேற்றைக்கு மட்டும் நிஃப்டி 2.39% இறக்கம் கண்டிருக்கிறது. நிஃப்டிக்கு 10500 என்கிற புள்ளியில் சந்தை ஏற்றமா இறக்கமா என்பதில் மீண்டும் ஒரு பலப் பரிட்சை நடக்கலாம் என அன்லிஸ்டுகள் தெரிவித்தார்கள்.
நிஃப்டி காளையா கரடியா
ஆனால் நிஃப்டி வர்த்தகமாகத் தொடங்கிய உடனேயே 78 புள்ளிகள் குறைந்து 10521க்கு வர்த்தகமாகி வருகிறது. எனவே நிஃப்டியின் சரிவு இன்றும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 10500 உடைந்து கீழே வர்த்தகமாகும் நிலை வந்தால் 10420 புள்ளிகள் மற்றொரு பல பரிட்சையை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.
சென்செக்ஸ் ஓகே
சென்செக்ஸ் 35169 புள்ளிகளில் நேற்று 806 புள்ளிகள் இறங்கி வர்த்தகம் நிறை வடைந்தது. தற்போது காலை வர்த்தகமாகத் தொடங்கியதும் சற்றே நிதானமாக 69 புள்ளிகள் மட்டும் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டிக்கு 10500 என்கிற புள்ளிகளில் பலபரிட்சை இருக்க வாய்ப்பிருப்பதைப் போல, சென்செக்ஸுக்கு 35000 புள்ளிகளில் எதிர்பார்க்கலாம் என்று சந்தையில் ஒரு கருத்து நிலவுகிறது. 35000 புள்ளிகள் உடைந்து கீழே வர்த்தகம் தொடர்ந்தால் 34300ல் ஒரு நல்ல சப்போர்ட் எடுத்து பல பரிட்சை நடத்த வாய்ப்பு இருக்கிறதாம்.
டாலர்
நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 73.58க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை நிலையாக நின்று 73.55க்கு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. எனவே ஆர்பிஐ கூட்டத்தின் மீது முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் வைத்திருக்கும் நம்பிக்கை இதில் வெளிப்படுகிறது.
உலக சந்தைகள்
நேற்று அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 1.85 சதவிகிதம் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்தது. லண்டன் பங்குச் சந்தை மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் 1.25 மற்றும் 1.49 சதவிகிதம் இறக்கம் கண்டு வர்த்தகமானது. ஜெர்மனி பங்குச் சந்தையும் 0.35 சதவிகிதம் இறக்கத்திலேயே சந்தை நிறைவடைந்தது.
ஆசியச் சந்தைகள்
இன்று வர்த்தகமாகி வரும் ஆசிய சந்தைகளான நிக்கி, ஸ்ரைட் டைம்ஸ், ஹேங் செங், தைய்வான் வெயிட்டெட், கோஸ்பி, எஸ்.இ.டி காம்போஸைட், ஜகர்தா காம்போஸைட், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி என்று அனைத்து சந்தைகளூகு0.28 சதவிகிதத்தில் இருந்து 1.97 சதவிகிதம் வரை இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.
செக்டோரியல் இண்டெக்ஸ்
பொதுத்துறை நிறுவனம் சார்ந்த பங்குகள், எரிசக்தி சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இருப்பினும் அனைத்துத் துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகின்றன. இத்தனை நாட்கள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இறக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சந்தை நிலை பெறாமலேயே சரிவில் வர்த்தகமாகி வந்த சந்தை இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் நிலை பெறத் தொடங்கி இருக்கிறது. இது எவ்வளவு தூரம் நிலைக்கும் என்பதை இன்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .


Click it and Unblock the Notifications