2018-19பட்ஜெட்க்கு பின் அதன் அதிர்வுகள் மூலம் சென்செக்ஸ் குறியீடு 3,000 புள்ளிகள் வரையில் சரியும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே கணிப்புகள் வெளியிட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 500 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிந்து 35,550 புள்ளிகளைத் தொட்டது.
இந்த நிலைக்குப் பட்ஜெட் மட்டும் காரணம் இல்லை..?
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
என்ன காரணம்..?
பட்ஜெட் அறிக்கையில் சாமானியர்களுக்குப் பெரிய அளவிலான பலன்கள் ஏதுமில்லாதது மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
இதனுடன் நீண்ட கால முதலீட்டாளர்களை முடக்கும் வகையில், மத்திய அரசு விதித்துள்ள LTCG வரி முதலீட்டாளர் மத்தியில் அதிர்ச்சி மட்டுமின்றி அதிகளவிலான லாபத்தை இழக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
பங்கு விற்பனை
இதன் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் பங்கு இருப்புகளை விற்பனை செய்து வரியில் ஏற்படும் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வழியைத் தேடி வருகின்றனர்.
அமெரிக்கப் பெரடல் ரிசர்வ்
அமெரிக்காவில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்புத் தகவல்கள் சிறப்பாக இருக்கும் நிலையில் மார்ச் 21ஆம் தேதி நடக்கும் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டியை உயர்த்தும் பணியைத் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.
முதலீடுகள் வெளியேறும்..
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் அந்நாட்டு முதலீட்டுப் பத்திர முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும், இதனால் இந்திய சந்தையில் இருக்கும் முதலீடுகள் அதிகப்படியாக வெளியேற வாய்ப்புகள் உள்ளது.
உலகச் சந்தை
இதுமட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் இன்று ஆசிய சந்தை முழுவதும் மந்தமான வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில் அன்னிய முதலீட்டு அளவுகள் மிகவும் குறைவான அளவிலேயே இந்திய சந்தையில் குவிந்துள்ளது.
இன்றைய வர்த்தகம்
இத்தகையை மோசமான சூழ்நிலையில் வர்த்தகத்தைத் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகத் துவக்கத்திலேயே 500 புள்ளிகள் இழந்தது.
இதனால் முதலீட்டாளர்களும் தங்களது முதலீட்டைக் குறைத்துக்கொண்டனர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
11.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 254.95 புள்ளிகள் சரிந்து 34,811.80 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 83.30 புள்ளிகள் சரிந்து 10,677.30 புள்ளிகளை எட்டியிருந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications