ரூ.50 லட்சம் கோடி மாயம்.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. எப்பதான் விடிவுகாலம் பிறக்கும்..!

இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து சுமார் ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த 2 மாதத்தில் விற்றுள்ளனர். இதனால் கடந்த 2 வருடமாக அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தற்போது பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 158.60 புள்ளிகள் சரிந்து 77,421.71 புள்ளிகளை அடைந்துள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் சென்செக்ஸ் தனது வரலாற்று உச்ச அளவான 85,978.25 புள்ளிகளை அடைந்தது, கிட்டத்தட்ட 8000 புள்ளிகளை இழந்துள்ளது.

ரூ.50 லட்சம் கோடி மாயம்.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. எப்பதான் விடிவுகாலம் பிறக்கும்..!

இதேவேளையில் இந்த பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை போக்கு குறையத் தொடங்கியுள்ளதால், இந்தியச் சந்தை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகச் சந்தை நிபுணர்கள் கூறுவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் எஃப்ஐஐ முதலீட்டாளர்களின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. முதல் வாரத்தில் ரூ.20,000 கோடி வரையிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் வெளியேற்றத்தின் அளவு ரூ.2,500 கோடியாகக் குறைந்துள்ளது. இது எஃப்ஐஐ முதலீட்டாளர்களின் முதலீட்டு முடிவில் நடந்த முக்கியமான மாற்றத்தை காட்டுகிறது.

முன்னணி முதலீட்டு நிறுவனமான சிஎல்எஸ்ஏ, அதன் முதலீட்டு ஒதுக்கீட்டுக் கொள்கையை அக்டோபர் மாதமே மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்தது. இந்த மாற்றத்தின் மூலம் சீனாவில் அதிகப்படியான முதலீடு செய்யவும், இந்தியாவில் 20% அதிக எடையுடனும் முதலீட்டுக் கொள்கையை மாற்றி அமைப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளையில் நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு முதலீட்டுச் சந்தையில் நடக்கும் Santa Rally முதலீட்டின் போது இந்தியாவில் இருந்து முதலீட்டு வெளியேற்றம் குறையும் என நம்பப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு இறுதியில் எஃப்ஐஐ முதலீட்டாளர்களின் இந்தியப் பங்கு முதலீட்டின் விற்பனையைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தாலும், டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்சிக்கு வருவதால் பல்வேறு கொள்கைகளில் மாற்றம் இருக்கும். இதனால் ஜனவரி மாதம் வரையில் பங்குச்சந்தையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் செப்டம்பர் 27 ஆம் தேதி உச்சத்தைத் தொட்டதிலிருந்து, எம்எஸ்சிஐ இந்தியா அமெரிக்க டாலர் அடிப்படையில் சுமார் 12% குறைந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி சுமார் 10% குறைந்துள்ளது. எஃப்ஐஐ வெளியேற்றம் நின்றாலும், புதிய முதலீடுகள் இல்லாவிட்டாலும், உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு சந்தையை உயர்த்தலாம் என்றும் சந்தை நிலவரம் கூறுகிறது.

இதேவேளையில் முதலீட்டாளர்களை அதிகம் நெருடும் விஷயம் இந்திய நிறுவனங்களின் சமீபத்திய இரண்டாவது காலாண்டு வருவாய் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தது தான். ஆனால் கடந்த 2 மாதத்தில் 50 லட்சம் கோடி இழப்பால் நிறுவனங்களின் மதிப்பீடுகள் கணிசமாகக் குறைந்தாலும் இன்னும் அதிக மதிப்புடையதாகவே இருப்பதாகக் கவலைகள் எழுந்துள்ளன.

மேலும் மூன்றாவது காலாண்டில் ஓரளவு மீட்சியும், நான்காவது காலாண்டில் வலுவான செயல்திறனை இந்திய நிறுவனங்கள் வெளிப்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இந்திய பங்குச்சந்தையை மீண்டும் உயர்வுக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+