இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் பங்குகள் விற்பனை செய்து விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளார்கள் எனச் செய்திகள் வெளியானதில் இன்போசிஸ் பங்குகள் இன்று 1.62 சதவீதம் வரை சரிந்தது. இந்தச் செய்தியை இன்போசிஸ் நிறுவனர்கள் முழுமையாக மறுத்த காரணத்தால் வர்த்தக முடிவில் சற்று உயர்வடைந்து 0.80 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.
மேலும் பிரிட்டன் நாட்டுத் தேர்தல் காரணமாக ஐரோப்பிய சந்தையில் இன்று வர்த்தகம் மந்தமாகக் காணப்படுகிறது.

இதன் எதிரொலியாகக் காலை வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் மும்பை பங்குச்சந்தை தனது வர்த்தகத்தைத் துவங்கியது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் தருவாயில் சரிவில் இருந்து மீண்டு லாப நிலைக்கு மீண்டது. இதன் படி இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 48.70 புள்ளிகள் உயர்ந்து 31,262.06 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 21.00 புள்ளிகள் உயர்ந்து 9,668.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications