இந்திய பங்கு சந்தையானது சமீபத்திய காலமாகவே அதிகளவிலான ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியின் முடிவால் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வந்தன.
எனினும் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் நடப்பு மாதத்தில் மட்டும் 3.2% ஏற்றம் கண்டுள்ளது.
தற்போது சென்செக்ஸ் 523.49 புள்ளிகள் அதிகரித்து, 59,340.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 122.4 புள்ளிகள் அதிகரித்து, 17,657.15 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
பணவீக்கம் சரிவு?
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது சற்று குறைந்துள்ளது. இதனால் வட்டி விகிதம் அதிகரிப்பு வரும் அமர்வில் இருக்காது என்று ஒரு தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் இனி பெரியளவில் முதலீடுகள் வெளியேறாது என்ற எதிர்பார்ப்பும் இருந்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
இதற்கிடையில் கொரோனாவில் இருந்து முழுமையாக வெளியேறி வந்துள்ள நாடுகளில், வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் தேவை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் வளர்ச்சி காணத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் அதிகரிக்கலாம்
தொடர்ந்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை மாதத்திலேயே அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் மாதத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய சந்தையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு முடிவுகள்
தற்போது ஜூன் காலாண்டு முடிவுகளை பல நிறுவனங்களும் வெளியிட்டு வரும் நிலையில், அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் சர்வதேச சந்தையின் போக்கும் இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமர் ப்ராடக்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ,ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல், ஐடிசி, என் டி பி சி, எம் &எம், ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications