இந்திய பங்கு சந்தையானது கடந்த இரண்டாவது நாளாக 600 புள்ளிகளுக்கு மேலாக சரிவடைந்து முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் 635.05 புள்ளிகள் அல்லது 1.03% குறைந்து, 61,074.24 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 179.70 புள்ளிகள் அல்லது 0.98% குறைந்து, 18,205.60 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
சர்வதேச சந்தைகள் பலவும் நேர்மறையாக இருந்தாலும், இந்திய சந்தையானது சரிவிலேயே காணப்படுகின்றது.
கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் கோடி?
கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் கோடி ரூபாய் பி எஸ் இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 287.4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது இன்று 282.8 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இன்று ஒரே அமர்வில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 4..6 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இது இன்று வெளியாகவிருக்கும் இருப்பு குறித்தான தரவு என்னவாகுமோ என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இது இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்படும் சிறு மாற்றமும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சீனாவில் தேவை குறையலாம்
சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அது மேற்கொண்டு மற்ற நாடுகளுக்கும் பரவலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக இதுவும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டெக்ஸ் நிலவரம் என்ன?
இன்றைய சந்தை அமர்வில் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடானது 2% மேலாக சரிவிலும், நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பி எஃப் எம் சி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி 50 உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டிவிஸ் லேப்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், சிப்லா, சன் பார்மா, ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும், இதே அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், இந்தஸ் இந்த் வங்கி, பஜாஜ் பின்செர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, ஹெச் சி எல் டெக் , டெக் மகேந்திரா, டிசிஎஸ், நெஸ்டில் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
அதிகரித்து வரும் கொரோனா அச்சம்
இந்திய ஈக்விட்டி சந்தையானது சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளுக்கு மத்தியில், அது இந்தியாவிலும் அதிகரிக்கலான் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதுவே சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மேக்ரோ பொருளாதார நிலைகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணம் எனலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications