வரும் நாட்களில் சந்தையை தீர்மானிக்க போகும் காரணிகள்.. எப்படியிருக்க போகிறது?

இந்திய பங்கு சந்தையில் கடந்த இரண்டு வார காலமாகவே உச்சம் தொட்டு வரும் நிலையில், வரும் வாரத்தில் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரத்தில் உற்பத்தி குறித்தான பி எம் ஐ தரவானது வரவிருக்கும் நிலையில், அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ் &பி குளோபல் இந்தியாவின் பி எம் ஐ விகிதமானது, கடந்த அக்டோபர் மாதத்தில் 55.1 ஆக இருந்தது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 54.3 ஆக இருந்தது நினைவுகூறத்தக்கது.

ரெப்போ விகிதம் அதிகரிப்பு

ரெப்போ விகிதம் அதிகரிப்பு

இதற்கிடையில் வர்த்தகர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்தான முடிவு குறித்தும் முதலீட்டாளார்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது டிசம்பர் 7ம் தேதியன்று அறிவிக்கப்படலாம். நிபுணர்கள் பலரும் அந்த கூட்டத்தில், ரெப்போ விகிதத்தினை அதிகரிக்கலாம் என கூறி வருகின்றனர்.

அன்னிய செலவாணி கையிருப்பு

அன்னிய செலவாணி கையிருப்பு

இதற்கிடையில் டிசம்பர் 9 அன்று அன்னிய செலவாணி கையிருப்பு குறித்தான தரவும் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது இந்திய பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

எல்லை தாண்டிய ரூபாய் வணிகம் குறித்து ஆலோசனை

எல்லை தாண்டிய ரூபாய் வணிகம் குறித்து ஆலோசனை

வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளை நிதியமைச்சகம் கூட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஆறு தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். டிசம்பர் 5 அன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில், அமெரிக்க டாலருக்கு பதிலாக எல்லை தாண்டிய ரூபாய் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல்

இரண்டாம் கட்ட தேர்தல்

குஜராத்தில் டிசம்பர் 5ம் தேதியன்று இரண்டாம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இந்த இரு கட்ட தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அன்னிய முதலீடுகள் வரத்து

அன்னிய முதலீடுகள் வரத்து


அன்னிய முதலீடுகள் வரத்தானது, ஏற்கனவே டிசம்பர் மாதத்தில் பெரியளவில் வரத் தொடங்கியுள்ளது. இது இனி வரும் வாரங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் ஐடி மற்றும் நிதித்துறை, ஆட்டோ துறை, எஃப்எம்சிஜி, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் டெலிகாம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் வலுவாக காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை அதிகம் இருந்த நிலையில், நவம்பரில் முதலீடுகள் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. குறுகிய காலத்தில் அன்னிய முதலீடுகள் என்பது மிக முக்கிய காரணியாக சந்தையில் இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

 டாலரின் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கும்

டாலரின் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கும்

டாலரின் மதிப்பானது தற்போது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. ஆக டாலரின் மதிப்பானது மேலே அதிகரிக்கும்போது அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்ய ஆரம்பிப்பார்கள். டாலர் மதிப்பு குறையும்போது முதலீடுகள் அதிகரிக்கலாம். எப்படியிருப்பினும் அன்னிய முதலீடுகள் என்பது கணிசமாக இருக்கும். ஆனால் இந்தியாவினை பொறுத்த வரையில் அதிக மதிப்பீடு என்பது ஒரு தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய தரவுகள் கவனம்

முக்கிய தரவுகள் கவனம்

இது மட்டும் அல்ல வரவிருக்கும் நாட்களில் ஏற்றுமதி & இறக்குமதி மற்றும் உற்பத்தி குறித்தான தரவு, கச்சா எண்ணெய் இருப்பு, பி எம் ஐ விகிதம், நுகர்வோர் விலை குறியீடு, பிபிஐ என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் பணவீக்கம் என்பதும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனை கட்டுபடுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு சந்தைக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+