இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், வரும் வாரத்தில் சந்தையானது மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஹெச் சி எல் டெக், ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், வரும் வாரத்தில் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.

இது தவிர ஏஞ்சல் ஒன், ஜஸ்ட் டயல், நெட்வொர்க் 18, குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏப்ரல் 17 அன்று, தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன. இதனை தொடர்ந்து கிரிசில், ஐசிஐசிஐ லம்பர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், டாடா காபி ஏப்ரல் 18 அன்று காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளது.
மாஸ்டெக் மற்றூம் டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏப்ரல் 19 அன்று தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன. சியன்ட், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏப்ரல் 20 அன்றும், தேஜஸ் நெட்வொர்க்ஸ், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஹிந்துஸ்தான் ஜிங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏப்ரல் 21 அன்று காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளது.
வரும் வாரத்தில் டெபாசிட் வளர்ச்சி மற்றும் வங்கி கடன் வளர்ச்சி குறித்தான தரவுகள் ஏப்ரல் 21, 2023 அன்று வெளியாகவுள்ளது.
இது தவிர வரும் வாரத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகளின் விகிதமும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த வாரத்திலேயே அன்னிய முதலீட்டு விகிதமானது கணிசமாக அதிகரிதுள்ள நிலையில், வரவிருக்கும் வாரத்திலும் அதிகரிக்கலாம். இது சந்தையில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

இது தவிர அமெரிக்காவின் முக்கிய தரவுகளும் வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ளன. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக வீடு விற்பனை, வேலையின்மை நலன், கச்சா எண்ணெய் இருப்பு, உற்பத்தி குறித்தான தரவு, பிஎம்ஐ தரவு என பலவும் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

நிஃப்டி அவுட்லுக்: ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிஃப்டி கடந்த வாரம் வலுவான ஏற்றத்தினை கண்ட நிலையில், வரும் வாரத்திலும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டியின் முக்கிய லெவல் என்பது 17,884 - 17,925 என்ற லெவலையும் எட்டலாம். இதன் சப்போர்ட் லெவல் 17,717 என்ற லெவலையும் எட்டலாம்.
பேங்க் நிஃப்டி: பேங்க் நிஃப்டியும் கடந்த வாரத்தில் வலுவான ஏற்றத்தினை கண்டுள்ளது. இது வரும் வாரத்திலும் ஏற்றத்தினை காணலாம். இதன் முக்கிய லெவல்களாக 42,440 - 42,680 என்ற லெவலையும் எட்டலாம்.


Click it and Unblock the Notifications