மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 5 வர்த்தக நாளாக உயர்வான நிலையிலேயே இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை அடைந்தது.
வாரத்தின் கடைசி நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்த காரணத்தால் வர்த்தகத் துவக்கம் முதலே அதிகளவிலான வர்த்தகத்தைச் சென்செக்ஸ் பெற்றது. இதன் காரணமாக வர்த்தகம் துவங்கி சில மணிநேரத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்து காணப்பட்டது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.21 புள்ளிகள் உயர்ந்து 34,153.85 புள்ளிகளை அடைந்துள்ளது, மேலும் நிஃப்டி குறியீடு 54.05 புள்ளிகள் உயர்ந்து 10,558.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நுகர்வோர் நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆகியவை அதிகளவிலான வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெற்று வளர்ச்சியை அடைந்துள்ளது.
இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமெரிக்காவில் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை கணிப்புகளை விடவும் டிசம்பர் மாதம் சற்றுக் கூடுதலாக 2,50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ஆசிய சந்தையின் இன்றைய உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications