இந்திய பங்கு சந்தையில் வரவிருக்கும் வாரத்தில் ராம நவமி காரணமாக மார்ச் 30 அன்று விடுமுறையாகும். இதே மார்ச் 29 அன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி ஆகவிருக்கும் நிலையில், அதனை தொடர்ந்து இந்த விடுமுறையும் வரவுள்ளது. ஆக வரவிருக்கும் நாட்களில் சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர பிப்ரவரி மாதத்திற்கான உள்கட்டமைப்பு வெளியீட்டுத் தரவு மார்ச் 31 அன்று வெளியிடப்படவுள்ளது.
உள்கட்டமைப்பு தரவு
இந்தியாவில் உள்கட்டமைப்பு உற்பத்தி கடந்த ஆண்டினை காட்டிலும் ஜனவரி 2023ல் 7.8% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கீழாக குறைந்து 7% ஆக இருந்தது. ஆக மார்ச் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த உள்கட்டமைப்பு தரவானது சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதே மார்ச் 31ல் வெளி கடன் விகிதம், நடப்பு கணக்கு பற்றாக்குறை, அன்னிய செலாவணி கையிருப்பு தரவு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி20 மாநாடு
மார்ச் 27ல் இருந்து ஏப்ரல் 4 வரையில் நடக்கவிருக்கும் ஜி20 கூட்டத்தில் முக்கிய தரவானது வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் சந்தையில் பிரதிபலிக்கலாம்.
சர்வதேச பங்கு சந்தைகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில், தற்போது வங்கித் துறையிலும் பிரச்சனை என்பது நிலவி வருகின்றது. ஆக வங்கித் துறையில் நிலவி வரும் இந்த நெருக்கடியானது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே இதன் காரணமாக சர்வதேச பங்கு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வருகின்றன. ஆக இதன் தாக்கமும் சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கிகள் கூட்டம்
ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் பாங்க் ஆப் இங்கிலாந்து உள்ளிட்ட பல மத்திய வங்கிகள் தொடர்ந்து, பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதுவும் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. ஆக வரவிருக்கும் வாரத்திலும் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்கா தரவுகள்
வரவிருக்கும் நாட்களில் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில், பெடரல் உற்பத்தியின் இன்டெக்ஸ் ஆனது மார்ச் 27 அன்று வெளியாகவுள்ளது. இது தவிர ட்ரேட் பேலன்ஸ், மொத்த இருப்பு, சிபி கன்சியூமர் கான்ஃபிடன்ஸ், வீடு விலை குறியீடானது மார்ச் 28 அன்று வெளியாகவுள்ளது. இது தவிர ஏபிஐ கச்சா எண்ணெய் தரவு, விற்பனையாக வீடு தரவுகள் மார்ச் 29 அன்றும், ஜிடிபி வளர்ச்சி தரவானது, வேலையின்மை நலன் குறித்தான தரவானது மார்ச் 30 அன்றும், தனி நபர் வருமானம், சிகாகோ பிஎம்ஐ உள்ளிட்ட பல தரவுகள் வெளியாகவுள்ளன.
டெக்னிக்கல் பேட்டர்ன்?
நிஃப்டி-யின் லெவல் ஆனது 17,100 கீழாக வர்த்தகமாகி வருகின்றது.இந்த போக்கு இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 16,700 வரையில் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏற்றத்தில் 17,100 லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உடைத்தால் 17,250 - 17,300 என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டி 39,750 அல்லது 200 நாள் மூவிங் ஆவரேஜ் என்பது முக்கிய லெவலாக இருக்கலாம். ஆக கீழாக சரிந்தால் 39,000 - 38,700 என்ற லெவலை எட்டலாம். இதே மேலே ஏற்றம் கண்டால் 40,200 - 40,300 என்ற லெவலையும் எட்டலாம்.


Click it and Unblock the Notifications