இந்தியாவில் ஜிஎஸ்டி வரி திருத்தம் நடைமுறைக்கு வந்தது முதலே சிறிய கார்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக மாருதி சுசுகி நிறுவனத்துக்கு வரலாறு காணாத விற்பனை கிடைத்துள்ளது. இதனால் மாருதி சுசூகி நிறுவன பங்கு தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தை சரிவிலேயே இருந்த போதிலும் இன்றை தினமும் மாருதி சுசூகி பங்குகள் ஏற்றம் கண்டன. செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று வர்த்தகத்தில், இந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட 2% உயர்ந்து, ரூ.16,375 என்ற புதிய சாதனை உச்சத்தைத் தொட்டது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17-வது முறையாக மாருதி சுசூகி பங்குகள் புதிய உச்சத்தைத் தொடுவது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரி குறைப்புகளால் வாகன விற்பனை அதிகரித்து இந்த பங்குகள் லாபம் பெறும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.
பல தரகு நிறுவனங்கள் மாருதி சுசூகியின் இலக்கு விலையை உயர்த்தியதும் இந்த எழுச்சிக்கு மேலும் ஊக்கமளித்தது. இதன் மூலம் சமீபத்திய வாகனத் துறை வளர்ச்சியில் மாருதி பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. தொடர்ந்து எட்டாவது வாரமாக இந்தப் பங்கின் விலை உயர்ந்தது. இதன் மூலம் நடப்பாண்டில் இதுவரை மாருதி சுசூகியின் பங்குகள் 50% லாபம் ஈட்டியுள்ளன.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், மாருதி சுசூகியின் மதிப்பீட்டை 'நடுநிலை' என்பதில் இருந்து 'வாங்கு' என்று உயர்த்தியுள்ளது. அத்துடன், இலக்கு விலையை ரூ.13,800-ல் இருந்து ரூ.18,900 ஆக உயர்த்தியுள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் விலை சரிசெய்தல்களைத் தொடர்ந்து, ஆரம்ப நிலை கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த உயர்விற்கு காரணமாகும். மேலும், மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்பன் டை ஆக்சைடு ஆபத்து, போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளதாகவும், 2028 நிதியாண்டுக்குள் கார்ப்பரேட் சராசரி எரிபொருள் திறன் (CAFE) 3 விதிமுறைகளுக்கு இணங்கும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
விற்பனையைப் பொறுத்தவரை, 2026, 2027 மற்றும் 2028 நிதியாண்டுகளில் மாருதி சுசூகியின் விற்பனை முறையே 5%, 12% மற்றும் 9% அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. இது தொழில் துறை வளர்ச்சி விகிதங்களான 4%, 8% மற்றும் 9% உடன் ஒப்பிடுகையில் சாதகமானதாகும்.
மேலும், 2026-28 நிதியாண்டுகளுக்கான அதன் ஒரு பங்கு வருவாய் (EPS) மதிப்பீடுகளை 12% வரை உயர்த்தியுள்ளது. முன்னதாக, மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தனது இலக்கு விலையை ரூ.18,360 ஆக உயர்த்தியது.
பேங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) தனது இலக்கு விலையை ரூ.17,000 ஆக உயர்த்தியது. சிட்டி மற்றும் HSBC போன்ற பிற உலகளாவிய தரகு நிறுவனங்களும் தங்கள் இலக்குகளை முறையே ரூ.17,500 மற்றும் ரூ.17,000 ஆக உயர்த்தியுள்ளன. எனவே முதலீட்டாளர்கள் நம்பிக்கையோடு இதனை வாங்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது மாருதி சுசூகியின் குறுகிய மற்றும் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த வலுவான நம்பிக்கையை காட்டுகிறது. நவராத்திரி பண்டிகை காலத்தில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு மிகச்சிறந்த தொடக்கம் என்று கூறும் மாருதி சுசூகி, ஞாயிற்றுக்கிழமை அன்று கிட்டத்தட்ட 30,000 பயணிகள் வாகனங்களை விநியோகித்துள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல், ஜிஎஸ்டி திருத்தத்திற்கு அப்பால், கூடுதலாக விலை குறைப்பை அறிவித்ததில் இருந்து, மாருதி சுசுகி 75,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.
தினசரி 15,000 முன்பதிவுகள் வருவதாக நிறுவனம் கூறியுள்ளது, இது வழக்கமானதை விட 50% அதிகமாகும். விலை குறைப்புகளுடன் கூடுதலாக, மாருதியின் தற்போதைய தள்ளுபடி திட்டங்கள் செப்டம்பர் இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications