அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தது முதல், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இரு நாடுகளும் ஈகோவில் போட்டி போட்டு பரஸ்பரம் இறக்குமதி வரியை அதிகரித்தன. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும அபாயம் ஏற்பட்டது. இருப்பினும், இப்படி போட்டி போட்டு வரியை உயர்த்துவதால் எந்தவித பயனும் இல்லை நஷ்டம் நமக்குதான் என்பதை உணர்ந்த இரு நாடுகளும், வரிகள் தொடர்பான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடிவு செய்தன.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பர வரியை குறைத்து கொள்ள ஒப்புக்கொண்டன. அதாவது சீன பொருட்களுக்கு விதித்த 145 சதவீத இறக்குமதி வரியை 30 சதவீதமாக குறைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. அதேபோல் அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125 சதவீத வரியை 10 சதவீதமாக குறைக்க சீனாவும் ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்துள்ளதால் சர்வதேச அளவில் பெரிய பதற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பெரிய அளவில் வெடித்தால், அது உலகளாவிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் என்ற என்ற கவலையை ஏற்படுத்தியது. இது உலோக தேவையை பெரிதும் பாதிக்கும் என்று அச்சம் எழுந்தது.
வர்த்தக போர்
தற்போது அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்துள்ளதால், சர்வதேச மந்தநிலை குறித்த அச்சம் நீங்கியது, உலோக தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், இந்திய பங்குச் சந்தையில் நேற்று உலோக துறையை சேர்ந்த பங்குகளின் விலை உயர்ந்தது. நிஃப்டி மெட்டல் இன்டெக்ஸ் 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. மெட்டல் இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள 15 நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது.
உலோக பங்குகள்
தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில், லாயிட்ஸ் மெட்டல் அண்ட் எனர்ஜி பங்கின் விலை 7.11 சதவீதம் உயர்ந்து ரூ.1,259.10ஆக அதிகரித்தது. இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் பங்கின் விலை 10.02 சதவீதம் அதிகரித்து ரூ.225.90ஆக உயர்ந்தது. செயில் நிறுவன பங்கின் விலை 8.25 சதவீதம் அதிகரித்து ரூ.118.00ஆக உயர்ந்தது. என்எம்டிசி நிறுவன பங்கின் விலை 6 சதவீதம் உயர்ந்து ரூ.68.15ல் நிலை கொண்டது. ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 3.84 சதவீதம் அதிகரித்து ரூ.651.25ல் முடிவுற்றது.
யோகி அரசு கொடுத்த பெரிய ஒப்பந்தம்.. அதானி பவருக்கு அடித்த ஜாக்பாட்.. கிடுகிடுவென உயர்ந்த பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications