மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சரிவு தத்தளித்த நிலையில் மாலை வர்த்தக முடியும் வரையில் சரிவில் இருந்து மீள முடியாமல் தவித்தது.
இன்றைய வர்த்தகத்தில் மிகவும் முக்கியமாக வங்கி பங்குகளும், ஐடி நிறுவன பங்குகளும் பெரும் தொடர்ந்து சரிவில் இருந்த காரணத்தால் சென்செக்ஸ், நிஃப்டி மீள முடியாத நெருக்கடியில் மாட்டிக்கொண்டது.

சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 1000 புள்ளிகள் மேல் சரிந்த நிலையில் வர்த்தகம் முடியும் போது 876.37 புள்ளிகள் சரிந்து 73,852.90 புள்ளிகளைத் தொட்டது. இதேபோல் நிஃப்டி குறியீடு 1.11 சதவீதம் சரிந்து 22,888.95 புள்ளிகளை தொட்டது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு இன்று ஒரே நாளில் 5 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 468 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இன்றைய மோசமான சரிவுக்கு பெரும் பங்கு வகித்த வங்கித்துறையில் ஆக்சிஸ் வங்கி பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இந்தியத் தனியார் வங்கிகள் FCNRB வைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகப்படியான நிதி ஆதாரம் மூலம் வங்கிகளின் நெட் இன்டர்ஸ்ட் மார்ஜின் குறைந்துள்ளது அல்லது மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதால் வங்கி பங்குகள் அதிகமாகச் சரிந்து வருகிறது.
ஐடி சேவைத் துறைக்குச் சமீப காலமாகப் பலமாக இருந்த ரூபாய் மதிப்பு சரிவு தற்போது எதிராக மாறியுள்ளது. ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டத்து மூலம் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் டாலர் மூலம் அதிக வருமானம் ஈர்க்கும் பெரும்பாலான நிறுவனங்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் வாயிலாகப் பெற்ற கூடுதல் வருமானம் குறையும்.
வங்கி, ஐடி துறை பங்குகளைத் தாண்டி பணவீக்கத்தால் பாதிக்கப்படும் அனைத்து நிறுவனமும் அதிகப்படியான இழப்பை இன்றைய வர்த்தகத்தில் சந்தித்தது.
குறிப்பாக அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை 4 சதவீதமும், டிரென்ட், என்டிபிசி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை தலா 2 சதவீதத்திற்கு மேல் சரிவைப் பதிவு செய்துள்ளது. சென்செக்ஸ் நிஃப்டி தாண்டி நிஃப்டி மிட்கேப் 100, ஸ்மால்கேப் 100 ஆகியவை தலா 1 சதவீதம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications

