புவிசார் அரசியல் கவலைகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள், அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு கண்டு வருகின்றன. பங்குச் சந்தைகளின் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பங்குச் சந்தையின் தொடர் சரிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா என்ற ஏக்கத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
இது போன்ற சூழ்நிலையில், இந்த ஆண்டு டிசம்பருக்குள் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,05.000 புள்ளிகளை எட்டும் என்று மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதாவது தற்போதைய நிலையிலிருந்து சென்செக்ஸ் சுமார் 41 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்கன் ஸ்டான்லியின் இந்த கணிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறு உத்வேகத்தை கொடுத்துள்ளது. மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் கூறியதாவது: இந்திய சந்தைளுக்கான ஆபத்து-ரிவார்டு சாதகமாக மாறி வருகிறது.

பங்குச் சந்தை ஏற்றமான சூழ்நிலையில், 2025 டிசம்பருக்கும் சென்செக்ஸ் 1,05,000 புள்ளிகளை எட்டும். தற்போதைய அடிப்படை சூழ்நிலை அடிப்படை பார்த்தால் இந்த ஆண்டு டிசம்பருக்கும் சென்செக்ஸ் 95,000 புள்ளிகளை தொட்டு விடும். அதேசமயம், தற்போதைய வீழ்ச்சி சூழ்நிலை நீடித்தால், டிசம்பருக்கும் சென்செக்ஸ் சுமார் 6 சதவீதம் குறைந்து 70,000 புள்ளிகளுக்கு சென்று விடும். மோர்கன் ஸ்டான்லியின் இந்திய பங்கு மூலோபாயவாதியும், இந்திய ஆராய்ச்சி பிரிவு தலைவருமான ரிதம் தேசாய் கூறுகையில், இந்திய சந்தைகள் இங்கிருந்து மீட்சி அடைய தொடங்கும்.
அமெரிக்க கொள்கை மற்றும் உலகளாவிய வளர்ச்சி விகிதங்கள் உள்ளிட்டவை இதற்கு காரணிகளாக இருக்கலாம். சர்வதேச மந்தநிலை அல்லது அருகில் உள்ள மந்தநிலை எங்களது முடிவை (இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காணும்) சவால் செய்யும். இந்தியாவின் குறைந்த பீட்டா பண்பு, பங்குச் சந்கைள் கையாளும் நிச்சயமற்ற மேக்ரோ சூழலுக்கு ஏற்ற சந்தையாக அமைகிறது என்று தெரிவித்தார். மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் கணிப்பின்படி, தற்போதைய சூழ்நிலையில், பங்குச் சந்தைகள் ஏற்றம் காண அதிக வாய்ப்புள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications