12 மாதங்களில் 16-38 சதவீதம் வரை லாபம்.. இந்த 10 பங்குகளை மறந்து விடாதீங்க

இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நடப்பு சாம்வாட் 2079ம் ஆண்டில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. வலுவான பொருளாதார நிலைமைகள், நிறுவனங்களின் சிறப்பான நிதி நிலை முடிவுகள், எஸ்.ஐ.பி. முதலீடு அதிகரிப்பு மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பு போன்றவை பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. தீபாவளியன்று தொடங்கும் சாம்வாட் 2080 புத்தாண்டிலும் பங்குச் சந்தைகள் அதன் சிறந்த செயல்திறனை தக்க வைத்துக்கொள்ளும் என்று பங்கு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் சாம்வாட் 2080 புத்தாண்டில் முதலீட்டுக்கு சிறந்த 10 பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.

எஸ்.பி.ஐ.: வங்கி துறையை சேர்ந்த இப்பங்கின் இலக்கு விலை ரூ.700ஆக மோதிலால் ஓஸ்வால் மதிப்பிட்டுள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.578.75ஆக உள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள் இப்பங்கின் விலை 22 சதவீதம் உயருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

12 மாதங்களில்  16-38 சதவீதம் வரை லாபம்..  இந்த 10 பங்குகளை  மறந்து விடாதீங்க

டைட்டன்: டாடா குழுமத்தை சேர்ந்த இந்நிறுவன பங்கின் விலை அடுத்த 12 மாதங்களுக்குள் ரூ.3,900ஆக உயரும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.3,284.45ஆக உள்ளது. 2024 தீபாவளிக்குள் இப்பங்கு விலை 19 சதவீதம் ஆதாயம் அளிக்கலாம்.

மகிந்திரா அண்ட் மகிந்திரா: வாகன துறையை சேர்ந்த இந்நிறுவன பங்கின் விலை தற்போது ரூ.1,553.15 உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,770ஆக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். சாம்வாட் 2080ம் ஆண்டில் இப்பங்கின் விலை 19 சதவீதம் அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்லா: மருந்து துறையை சேர்ந்த இந்த இந்நிறுவன பங்கின் விலை அடுத்த 12 மாதங்களில் ரூ.1,450ஐ எட்டும் என நிபுணர்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.1,238.45ஆக உள்ளது. அடுத்த 12 மாதங்களில் இப்பங்கு 21 சதவீதம் வரை ஆதாயம் அளிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஹோட்டல்ஸ்: விருந்தோம்பல் துறை சேர்ந்த இந்நிறுவன பங்கின் இலக்கு விலை ரூ.480ஆக நிர்ணயம் செய்துள்ளனர். 2024 தீபாவளிக்கும் இப்பங்கின் விலை 22 சதவீதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்பங்கின் விலை ரூ.405.05ஆக உள்ளது.

டால்மியா பாரத்: சிமெண்ட் துறையை சேர்ந்த இந்நிறுவன பங்கின் விலை அடுத்த 12 மாதங்களுக்குள் 33 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.2,800ஆக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.2,094.60ஆக உள்ளது.

கெய்ன்ஸ் டெக்: எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான இந்நிறுவன பங்கின் இலக்கு விலை ரூ.3,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.2,484.55ஆக உள்ளது. 2024 தீபாவளிக்குள் இப்பங்கின் விலை 26 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரேமண்ட்: டெக்ஸ்டைல் துறை சேர்ந்த இந்நிறுவனபங்கின் தற்போது விலை ரூ.1,884.10ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.2,600ஆக ஆய்வாளர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். அடுத்த 12 மாதங்களுக்குள் இப்பங்கு விலை 38 சதவீதம் உயரக்கூடும்.

ஸ்பந்தனா ஸ்பூர்த்தி: இந்நிறுவன பங்கின் இலக்கு விலை ரூ.1,100ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பங்கின் விலை தற்போது ரூ.958.20 ஆக உள்ளது. அடுத்த ஒராண்டுக்குள் இப்பங்கின் விலை 22 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரெஸ்ட்ராண்ட் பிராண்ட்ஸ் ஏசியா: உணவு வர்த்தக துறையை சேர்ந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.113.60 ஆக உள்ளது. அடுத்த 12 மாதங்களுக்குள் இப்பங்கு 16 சதவீதம் ஆதாயம் அளிக்கும். இப்பங்கின் இலக்கு விலை ரூ.135ஆக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+