சிறு முதலீட்டாளர்களில் பலர் எம்.ஆர்.எஃப். நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு பங்கின் விலை தெரிந்தவுடன் அப்படியே சத்தமில்லாமல் ஜகா வாங்கி விடுவார்கள். ஏன்னா பங்கு விலை அப்படி. ஒரு பங்கு விலை இப்போ ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.
கடந்த ஜூன் மாதம் எம்.ஆர்.எஃப்., இந்தியாவில் ஒரு பங்கு விலை ரூ.1 லட்சம் என்ற வரலாற்று சாதனையை எட்டிய முதல் நிறுவன பங்கு என்ற பெருமையை பெற்றது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அந்நிறுவன பங்கின் விலை 1,08,050ஆக இருந்தது.

எம்.ஆர்.எஃப். பங்கு விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்ற சந்தேகம் மற்றும் கேள்வி பலருக்கும் இருக்கிறது. மேலும் விலை அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், பெரும்பான்மையான நிறுவனங்கள் குறைந்த பங்கு விலைகளை கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பங்குகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குறைந்தவிலையில் மாற்றுவதற்காகவும் நிறுவனங்கள் அடிக்கடி பங்கு பிரிப்புகளை அறிவிப்பதே காரணமாகும்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ரூ.2,000 என்று வைத்துக் கொள்ளுவோம். அந்நிறுவனம் ஒரு பங்கினை 10 பங்குகளாக பிரிப்பதாக அறிவிக்கிறது என்றால், ஒரு பங்கு 10 பங்காக மாறும் அதேசமயம் ஒரு பங்கின் விலை ரூ.200ஆக இருக்கும். இதனால் சிறு முதலீட்டாளர்கள் அந்நிறுவன பங்கினை எளிதாக வாங்க முடியும். இதனால் அவர்களின் பணப்புழக்கம் அதிகரிக்கிறது.
ஆனால் எம்.ஆர்.எஃப். நிறுவனம் இதுவரை மறந்தும் கூட பங்கு பிரிப்பை அறிவித்ததே இல்லை. அதேசமயம் 1970 மற்றும் 1975ல் அந்நிறுவனம் முறையே 1:2 மற்றும் 3:10 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அறிவித்தது. அதன் பிறகு போனஸ் பங்குகளையும் அறிவிக்கவில்லை.
வெளிசந்தையில் தனிப்பட்ட முதலீட்டாளர்கள் உள்பட நிறுவன பங்குதாரர்கள் வெளிசந்தையில் வைத்திருக்கும் பங்குகள் நிலையாக இருந்தது. அதாவது நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகள் மட்டுமே சந்தையில் இருந்து வருகிறது.
காலப்போக்கில் நிறுவனமும் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயருகிறது மற்றும் பங்கு விலை அதிகரிக்கிறது. இதுதான் எம்.ஆர்.எஃப்.ல் நடந்து கொண்டு இருக்கிறது.
பங்கு விலை அதிகமாக இருப்பதால், எம்.ஆர்.எஃப். விலையுயர்ந்த நிறுவனமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா, நிறுவனத்தின் பங்கு விலைக்கு பதிலாக ஒரு பங்கு வாயிலான வருவாய் (பி.இ.) மற்றும் முக மதிப்பு (பி.பி.), சந்தை மூலதனம் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் பங்குகளை மதிப்பிடுகின்றனர்.
பி.இ. விகிதத்தை ஒப்பிடும்போது, போட்டி நிறுவனங்களை காட்டிலும் எம்.ஆர்.எஃப். அதிகமாக கொண்டுள்ளது. உதாரணமாக எம்.ஆர்.எஃப்.-ன் ஒரு பங்கு வாயிலான வருமானம் 36.81ஆக உள்ளது. அதேசமயம் அப்பல்லோ டயர்ஸின் ஒரு பங்கு வாயிலான வருமானம் 19.52ஆக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications