சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நாட்டின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று MRF. இந்நிறுவன பங்குதான் நாட்டின் விலை உயர்ந்த பங்காக உள்ளது. 2023 ஜூன் மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை முதல் முறையாக ரூ.1,00,000 என்ற மைல்கல்லை எட்டியது.
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் (Jan 17) எம்ஆர்எஃப் பங்கு விலை மற்றொரு மைல்கல்லை எட்டியது. நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1,50,000ஐ எட்டியது.

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எம்ஆர்எஃப் நிறுவன பங்குதான் முதல் முறையாக ரூ.1,50,000 என்ற அளவீட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் எம்ஆர்எஃப் பங்கு விலை புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் நேற்று மொத்தம் ரூ.37,219 கோடி மதிப்பிலான 27,248 எம்ஆர்எ.ப் பங்குகள் கை மாறின.
கடந்த செப்டம்பர் காலாண்டில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 5 மடங்கு அதிகரித்து ரூ.572 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 6.5 சதவீதம் உயர்ந்து ரூ.6,088 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவன பங்குக்கு அடுத்தப்படியாக பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா, 3எம் இந்தியா மற்றும் ஸ்ரீ சிமெண்ட் ஆகியவை விலை உயர்ந்த பங்குகளாக உள்ளன. இருப்பினும் எம்ஆர்எஃப் பங்கு விலையுடன் ஒப்பிடுகையில் அந்த பங்குகள் விலை சுமார் 4 மடங்கு குறைவாகும்.
இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.37,043.60ஆகவும், ஹனிவெல் ஆட்டோமேஷன் பங்கு விலை ரூ.36,773.75ஆகவும், 3எம் இந்தியா பங்கு விலை ரூ.34,065.30ஆகவும், ஸ்ரீ சிமெண்ட் பங்கு விலை ரூ.25,690ஆகவும் இருந்தது.
பங்குகள் பிரிக்கப்படும் வரை பிரபல மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவன பங்கும் இந்தியாவின் விலை உயர்ந்த பங்குகளில் ஒன்றாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் நெஸ்லே இந்தியா பங்குகள் 1:10 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, ரூ.10 முக மதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முக மதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்க ஒப்புதல் அளித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே நெஸ்லே இந்தியா நிறுவன பங்கு ரூ.2,520.00 விலைக்கு வர்த்தகமானது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications