மும்பை: உலகளாவிய பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான MSCI தனது குறியீடுகளில் சில இந்திய பங்குகளை சேர்க்க உள்ளதால், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்திய பங்குகளில் சுமார் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு வர வாய்ப்புள்ளது. MSCI தனது குளோபல் ஸ்டாண்டர்ட் குறியீட்டில் 7 பங்குகளை சேர்க்க உள்ளதுடன், HDFC வங்கியின் பங்கீட்டையும் அதிகரிக்க உள்ளது. மேலும், அதானி குழும பங்குகளின் ப்ரீ ப்ளோட் ஸ்டேட்டஸ் குறித்த கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
MSCI குறியீட்டு கட்டமைப்பில் ஏற்படும் இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 30 அன்று நடைமுறைக்கு வரும். எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETF) போன்ற உலகளாவிய பேசிவ் பண்ட்-களில் இந்த குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு தங்கள் பங்கு முதலீட்டுக்கு நிதியை ஒதுக்குகின்றன. இதன் விளைவாக, MSCI குறியீட்டில் ஏற்படும் எந்த மாற்றம் நிதி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வழிவகுக்கும்.

இந்த மாற்றங்களுடன், எமர்ஜிங் மார்க்கெட் (EM) குறியீட்டில் இந்தியாவின் பங்கீடு 19.4%லிருந்து 20% ஆக உயரும் என்று நுவமா ஆல்டர்னேட்டிவ் & குவாண்டிடேட்டிவ் ரிசர்ச் மதிப்பிட்டுள்ளது.
MSCI தனது குளோபல் ஸ்டாண்டர்ட் குறியீட்டில் HDFC வங்கியின் எடையை இரண்டு தவணைகளாக அதிகரிக்க MSCI முடிவு செய்துள்ளது. ஒன்று ஆகஸ்ட் மாதமும் மற்றொன்று நவம்பர் மாத மறு ஆய்விலும் கூட்ட உள்ளது. இந்த மாற்றம் மூலம் புதிய வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் சுமார் 3.8 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குவியலாம்.
MSCI தனது குளோபல் ஸ்டாண்டர்ட் குறியீட்டில் ஏழு நிறுவனங்களைச் சேர்த்துள்ளது. இவற்றில் டிக்சன் டெக்னாலஜிஸ், வோடாபோன் ஐடியா, ஆயில் இந்தியா, ஸைடஸ் லைஃப் சயின்சஸ், ரயில்வே விகாஸ் நிறுவனம், பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் மற்றும் ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகியவை அடங்கும். இந்த குறியீட்டிலிருந்து பந்தன் வங்கி நீக்கப்பட்டுள்ளது.
அதானி பங்குகளின் மீதான ப்ரீ ப்ளோட் ஸ்டேட்டஸ் குறித்த கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதால், இந்த பங்குகள் இனிவரும் காலங்களில் MSCI குறியீடுகளில் சேர்க்கப்படத் தகுதியுடையவையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications