தீபாவளிக்காக ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் பங்குச்சந்தை..!! Muhurat Trading-இல் என்ன நடக்கும்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 8ஆம் தேதியும் பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை Muhurat Trading என அழைக்கின்றனர். இந்த முகூரத் வர்த்தக நேரத்தில் என்ன நடக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி பங்கு சந்தைகளான பிஎஸ்இ (BSE) மற்றும் என்எஸ்இ (NSE) ஆகியவை தீபாவளி பண்டிகையை ஒட்டி நாளை சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தை நடத்துகின்றன. இந்த நாளில் 1 மணி நேரம் மட்டுமே பங்குச்சந்தை செயல்படும். புதிய சம்வத் ஆண்டில் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக மங்களகரமான தொடக்கமாக தீபாவளியில் ஆண்டுதோறும் முகூரத் வர்த்தகம் நடக்கிறது.

தீபாவளிக்காக ஞாயிற்றுக்கிழமையும் செயல்படும் பங்குச்சந்தை..!! Muhurat Trading-இல் என்ன நடக்கும்?

இந்து நாட்காட்டியின்படி புதிய ஆண்டு தொடங்குவதால், இந்த நாளில் புதிய முதலீடுகளை தொடங்குவது செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என முதலீட்டாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த ஆண்டு சம்வத் முகூரத் வர்த்தகம் பிற்பகல் 2.20 மணிக்கு தொடங்கி 3.30 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் ஏராளமானவர்கள் புது முதலீடுகளை தொடங்குவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளின் தரவுகளை பார்க்கும்போது, முகூரத் வர்த்தக அமர்வு பாசிடிவாகவே முடிந்துள்ளது. அதாவது இந்த ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே இருக்கும். ஏனெனில் இந்த சமயத்தில் புதிய முதலீடுகளே பெரும்பாலும் வரும் என்பதால் பங்குகள் ஏற்றத்துடன் தான் காணப்படும்.

Also Read

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முகூரத் வர்த்தகங்களில் 8 முறை நிஃப்டி ஏற்றத்துடன் தான் நிறைவடைந்துள்ளது. அதே வேளையில் நிஃப்டி 8 முறை உயர்ந்திருந்தாலும், எந்த ஆண்டிலும் அது 1%-க்கு மேல் லாபத்தை பதிவு செய்ததில்லை. இந்த 10 ஆண்டு காலத்தில் முகூரத் வர்த்தகத்தில் மிக வலுவான செயல்திறன் 2022-இல் பதிவானது. அப்போது பங்குச்சந்தை 0.88% அளவுக்கு உயர்ந்திருந்தது.

தற்போது சம்வத் 2082 முடிந்து 2083 ஆம் ஆண்டு பிறக்கிறது. கடந்த சம்வத் ஆண்டு இந்திய பங்கு சந்தை வரலாற்றில் மிக கடினமான மற்றும் சவால்கள் நிறைந்த ஆண்டுகளில் ஒன்றாக அமைந்தது. அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலருக்கும் மேல் உயர்ந்தது. இதனால் மார்ச் மாதத்தில் மட்டும் நிஃப்டி 11.3% சரிவை சந்தித்தது.

Recommended For You

அமெரிக்க டாலர் உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது என மோசமான ஒரு ஆண்டாகவே இருந்தது. இந்நிலையில் புதிய சம்வத் 2083ஆம் ஆண்டு பாசிடிவாகவே இருக்கும் என முன்னணி தரகு நிறுவனமான ஆக்சிஸ் டைரக்ட் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் கணிசமாக மீளும் என்றும், பங்குச்சந்தைகள் மீண்டு வருவதற்கான ஒரு ஆண்டாகவே இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+