இந்தியப் பங்குச் சந்தை ஒரு நீண்டகால பாரம்பரிய முறையாக நடத்தும் முஹூர்த் பங்கு வர்த்தகம் இந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. இந்த சிறப்பு வர்த்தகம் இந்து சூரிய நாட்காட்டியின் படி புதிய ஆண்டு தொடங்குவதைக் குறிக்கும் வகையில், இந்த தீபாவளி பண்டிகையின் போது நடைபெறும்.
இந்த ஒரு மணி நேர சிறப்பு வர்த்தகத்தின் மூலம் வருடம் முழுவதும் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கிறது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்து 79,832.57 புள்ளிகளில் வர்த்தகம் அடைந்து வருகிறது. என்எஸ்சி குறியீட்டைப் பார்த்தால் 129.45 புள்ளிகள் உயர்ந்து 24,334 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
சென்செக்ஸ் குறியீடு முஹூர்த் பங்கு வர்த்தகம் துவங்கி 20 நிமிடத்தில் அதிகப்படியாக 80,023.75 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி 24,368.25 புள்ளிகளை அடைந்துள்ளது.
கடந்த 10 முஹூர்த் வர்த்தகங்களில் 8 முறை சென்செக்ஸ் லாபகரமாக முடிவடைந்துள்ளது. இந்த முறை 15 நிமிட ப்ரீ டிரேடிங் வர்த்தகம் மாலை 5:45 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. வரலாற்று ரீதியாக, கடந்த 17 முஹூர்த் வர்த்தக நாளில் 13 முறை BSE சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நுகர்வோர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் உபயோகப் பொருட்கள் பங்குகள் வலுவான லாபத்தை ஈட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முஹூர்த் வர்த்தகம் புதிய ஆண்டிற்கான பங்குச் சந்தைக்கு நல்ல அறிகுறியாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர். இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு முஹூர்த் வர்த்தகம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்களும் பெரிய அளவிலான லாபத்தை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications