இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் சந்தை கணிப்புகளை உடைத்து சுமார் 12.5 சதவீத வளர்ச்சியில் சுமார் 13,101 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் அளவீட்டில் சுமார் 22 சதவீதம் சரிவை அடைந்தது.
2019 டிசம்பர் காலாண்டு முடிவில் 1,60,447 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்ற நிலையில், 2020 டிசம்பர் காலாண்டில் 1,28,450 கோடி ரூபாய் அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது. இது கிட்டதட்ட 22 சதவீதம் குறைவாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இந்த வருவாய் சரிவுக்கு முக்கியக் காரணம் இக்குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான். 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து இருந்து ஆண்டு இறுதி வரையிலும் மீள முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த ஆண்டுக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புப் பிரிவு மட்டும் 1.19 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில் தற்போது 83,838 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே பெற்றுள்ளது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு வர்த்தக முடிவில் 5.36 சதவீதம் வரையில் சரிந்து 1,939.70 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டனர்.
இன்றைய சரிவின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 12.29 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதோடு கிரெடிட் சூசி நிறுவனம் ரிலையன்ஸ் பங்குகளை நியூட்டரல் கால் ஆக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications