அம்பானி கைக்கு வந்த நிறுவனம்.. ரூ.52 கோடிக்கு கைமாறிய 10% நவ்யான் ஷிப்யார்டு பங்குகள்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு, ஊடகம் என பல்வேறு துறைகளின் வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது புதிய துறைகளிலும் தடம் பதிக்க தொடங்கி விட்டது. அதேசமயம் புதிய துறையில் சொந்தமாக ஒரு வணிகத்தை தொடங்குவதற்கு பதிலாக அந்த துறையில் உள்ள ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தி அந்த துறையில் களம் இறங்குவதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உதாரணமாக, ஜஸ்ட் டயல், ஹாட் ஸ்டார் போன்ற நிறுவனங்களை முகேஷ் அம்பானி நிறுவனம் கையகப்படுத்தியதை கூறலாம். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பார்வை கப்பல் கட்டும் துறை மீது விழுந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அண்மையில் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் வாயிலாக நவ்யான் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் (என்டிபிஎல்) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கியது.

அம்பானி கைக்கு வந்த நிறுவனம்.. ரூ.52 கோடிக்கு கைமாறிய 10% நவ்யான் ஷிப்யார்டு பங்குகள்..!

இந்நிலையில் தற்போது நவ்யான் ஷிப்யார்ட் பிரைவேட் லிமிடெட் (என்எஸ்பிஎல்) நிறுவனத்தில் கூடுதலாக 10 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் தனது முழு துணை நிறுவனமான நவ்யான் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாயிலாக ரூ.51.72 கோடிக்கு வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து இந்த பங்குகளை வாங்கியுள்ளது. இது கப்பல் கட்டும் துறையின் வளர்ச்சி திறனில் ரிலையன்ஸ் நிறுவனத்தின தொடர்ச்சியான நம்பிக்கையை நிரூபிக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை அமைப்புகளில் தாக்கல் செய்த அறிக்கையில், பரிவர்த்தனை நிறைவடைந்ததை நிறுவனம் உறுதிப்படுத்தியது. நவ்யான் ஷிப்யார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கூடுதலாக முதலீடு செய்திருப்பது நேர்மறையான விஷயம் என்பதால், இதன தாக்கம் அடுத்து வரும் பங்கு வர்த்தக தினத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலையில் எதிரொலிக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவடைந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை அ்தன் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.84 சதவீதம் உயர்ந்து ரூ.1,219.30ஆக இருந்தது. இருப்பினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தற்போது அதன் உச்ச விலையிலிருந்து சுமார் 24 சதவீதத்துக்கு மேல் குறைவாக உள்ளது.

2024 ஜூலை 8ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,608.95ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1,115.55க்கு சென்றது.

பாஜகவின் புதிய தலைவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. கோடியில் புரளும் நயினார் நாகேந்திரன்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+