மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஒரு பிரபல கட்டுமான பொறியியல் நிறுவனமாகும். இந்நிறுவனம் துறைமுகம், உள்கட்டமைப்பு, குடியிருப்பு போன்ற பிரிவுகளில் இந்தியா முழுவதும் பல சவாலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கட்டுமான துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பலத்த அனுபவம் கொண்ட நிறுவனம்.
இந்நிறுவனம் கடந்த நிதியாண்டு மற்றும் கடந்த சில காலாண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.165.99 கோடி ஈட்டியிருந்தது. 2023 ஜூன் காலாண்டில் ரூ.63.32 கோடியும், 2023 செப்டம்பர் காலாண்டில் ரூ.44.84 கோடியும் நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

வலுவான நிதி நிலை முடிவுகள், செயல்திறன் காரணமாக மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஒரு மல்டிபேக்கர் பங்காக விளங்குகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த ரியால்டி பங்கு 200 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேவேளையில், இந்த பங்கு விலை மேலும் தொடர்ந்து உயரும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நம்பிக்கையில், இந்நிறுவன பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.
உதாரணமாக குவாண்ட் மியூச்சுவல் பண்ட், போர்ப்ஸ் இஎம்எஃப், மினெர்வா வென்ச்சர்ஸ் பண்ட், கோயஸ் குளோபல் ஆப்பர்சுனிடி பண்ட், ஏரிஸ் ஆப்பர்சுனிடி பண்ட் உள்ளிட்ட நிறுவன முதலீட்டாளர்கள் மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் பங்குகளில் முன்னுரிமை வழிமூலம் முதலீடு செய்துள்ளனர்.
மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, குவாண்ட் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கு மொத்தம் 16 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2023 அக்டோபர்-டிசம்பர் கால நிலவரப்படி, இந்நிறுவனத்தில் குவாண்ட் மியூச்சுவல் பண்ட் மொத்தம் 60.30 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறது.
இது நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட மூலதனத்தில் 1.62 சதவீதமாகும். இந்த 16 லட்சம் பங்குகளை வாங்கிய பிறகு, மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் குவாண்ட் மியூச்சுவல் பண்டின் பங்கு மூலதனம் 0.43 சதவீதம் அதிகரித்து 2.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான மினெர்வா வென்ச்சர்ஸ் பண்ட் முன்னுரிமை வழியில் மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் 12.50 லட்சம் பங்குகளை வாங்கியது. மேன் இன்ப்ராகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் பங்கு ஒதுக்கீடு குழு இஎம்எஃப் நிறுவனத்துக்கு 14.70 லட்சம் பங்குகளை ஒதுக்கியது.
கோயஸ் குளோபல் ஆப்பர்சுனிடி பண்ட் முன்னுரிமை வழியில் 12.50 லட்சம் பங்குகளை பெற்றது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்த கட்டுமான நிறுவன பங்கில் முதலீட்டை அதிகரித்து வருவது, இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பை விதைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 850 சதவீதத்தக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.224ஆக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications