இந்திய பங்குச்சந்தைகளில் மல்டிபேக்கர் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்து வருகின்றன. அப்படி ஓராண்டிலேயே 450% லாபம் தந்த ஒரு நிறுவனத்தின் பங்குகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மஃபின் கிரீன் பைனான்ஸ் லிமிடெட் (Mufin Green Finance Ltd) டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி அல்லாத ஒரு நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனம் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு கடன் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

14 மாநிலங்களில் இது கிளைகளை நிறுவி , எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கான கடன்களை வழங்குகிறது. இதுவரை எலக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு என 300 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது.
ஓராண்டில் 450%க்கு மேல் லாபம்: இந்த NBFC பங்கு பங்குச்சந்தையில் ஓராண்டிலேயே 450% லாபம் தந்துள்ளது. வரும் காலங்களிலும் இந்த பங்கின் விலை ஏற்றத்தில் தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைய மும்பை பங்குச்சந்தையில் மஃபின் கிரீன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 250.75 ரூபாய் என உச்சம் கண்டது . கடந்த 8ஆம் தேதி இது தனது 52 வார கால உச்சமான 273.10 ரூபாயை எட்டியது.
அசர வைக்கும் லாபம்: கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 3,604 கோடி ரூபாயாக உள்ளது. ஓராண்டில் மட்டும் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 44 ரூபாயில் இருந்து 250.75 ரூபாய் என உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த 2022இல் 22.90 15 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2023இல் 45.5 கோடி ரூபாய் என உயர்வு கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்த மல்டிபேக்கர் பங்கு நிறுவனத்தின் மொத்த வருவாய் 271.78 கோடி, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 106.60 கோடி ரூபாய் என இருந்தது.
ஓராண்டிலேயே வருவாய் விகிதம் 155% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 272.17 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த மதிப்பு 106.87 கோடியாக மட்டும் இருந்தது. ஓராண்டு காலத்தில் வருவாயும் 155% உயர்ந்துள்ளது.
எனவே வரும் நாட்களிலும் இந்த நிறுவனத்தின் பங்குகள் ஏறுமுகத்திலேயே இருக்கும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த நிதி நிறுவனம் நல்ல வளர்ச்சி காணும் என்றே கணிப்புகள் கூறுகின்றன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications