இந்திய பங்குச் சந்தையில் பல ஆயிரம் நிறுவன பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் சில நிறுவன பங்குகளில் குறுகிய காலத்தில் பல மடங்கு லாபத்தை கொடுத்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு மல்டிபேக்கர் பங்குதான் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு. பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விஸ்கி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு கடந்த 3 ஆண்டுகளில் தான் மல்டிபேக்கராக மாறியுள்ளது.
2020 அக்டோபர் 19ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கின் விலை ரூ.9.33-ல் முடிவடைந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கின் விலை ரூ.267.90-ல் முடிவடைந்தது. இடைப்பட்ட 3 ஆண்டுகளில் இப்பங்கு 2771 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் இன்று அது ரூ.28.71 லட்சமாக மாறியிருக்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் சென்செக்ஸ் 61.36 சதவீதம் மட்டுமே உயர்ந்தது ஆனால் அதேகாலத்தில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு சுமார் 29 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு பெரிய சரிவையையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
2023 பிப்ரவரி 14ம் தேதியன்று பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.38.70ஆக குறைந்தது. இருப்பினும் கடந்த 18ம் தேதியன்று பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.328 ஐ எட்டியது.
பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.11 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகமாகும்.
2023 ஜூன் காலாண்டில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒட்டு மொத்த அளவிலான செயல்பாட்டு வாயிலான வருவாய் சுமார் 24 சதவீதம் அதிகரித்து ரூ.229 கோடியாக உயர்ந்துள்ளது.
Disclaimer
Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications