அள்ளிகொடுத்த பெங்களூர் ஸ்மால் கேப் பங்கு..! ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.3.54 லட்சம் லாபம்..!

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைவான சந்தை மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனங்களைத் தான் ஸ்மால் கேப் பங்குகள் என அழைக்கிறோம். ஸ்மால் கேப் பங்குகள் அதிக லாபம் ஈட்டும் திறன் கொண்டவை என்றாலும், அதிக ரிஸ்க் கொண்டவையாகவும் இருக்கும்.

இதனால் வேகமாக அதிகம் சம்பாதிக்க வேண்டும் என விரும்பும் முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் பங்குகளில் தேடி தேடி முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். சில நேரத்தில் ஸ்மால் கேப் பங்கு முதலீடுகள் நம்மைக் கவிழ்த்துவிட்டாலும், பல நேரத்தில் லாபத்தை அள்ளி கொடுக்கும் அப்படியொரு நிறுவனம் தான் சென்டம் எலக்ட்ரானிக்ஸ்.

அள்ளிகொடுத்த பெங்களூர் ஸ்மால் கேப் பங்கு.!ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.3.54 லட்சம் லாபம்..!

1994 ஆம் ஆண்டு பெங்களூரில் நிறுவப்பட்ட சென்டம், பல துறையில் இயங்கும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய பகுதிகளில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. தனது டிசைன் மற்றும் ப்ராடெக்ட் மேம்பாட்டுத் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி நிலையங்கள், உயர்ந்த தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் தனது தயாரிப்புகளை வழங்கக்கூடிய உலகளாவிய விநியோக சங்கிலியையும் சென்டம் நிறுவியுள்ளது இதன் பெரும் பலமாக உள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட Centum Electronics பங்குகள் நீண்ட கால அடிப்படையில் பன்மடங்கு லாபம் ஈட்டி வருகின்றன. கடந்த 1, 3 மற்றும் 5 ஆண்டுகளில் இந்த பங்குகள் சிறப்பான பங்கு மதிப்பு வளர்ச்சியை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது.

Centum Electronics பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 254 சதவீதம் உயர்ந்து 567.95 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 364 சதவீதமும், கடந்த 5 ஆண்டுகளில் 416 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதைவிட ஒரு முதலீட்டாளர்களுக்கு என்ன வேண்டும்..?

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அது ரூ.3.54 லட்சமாக மாறியிருக்கும். அதேபோல், 3 ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.4.64 லட்சம், ரூ.5.16 லட்சமாக இந்த முதலீடு மதிப்பு உயர்ந்திருக்கும்.

2024 ஆம் ஆண்டில் இதுவரை (YTD) 49 சதவீதம் உயர்ந்த Centum Electronics பங்குகள் பிப்ரவரி 27, 2024 அன்று ரூ.2,011.40 என்ற உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம், 2023 மார்ச் 14 ஆம் தேதி பதிவான 52 வார குறைந்த விலையான 497 ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 305 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக லாபம் ஈட்டியுள்ள Centum Electronics பங்குகள் இதுவரை 20.6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 19.35 சதவீதம் உயர்வும், கடந்த டிசம்பர் மாதத்தில் 8 சதவீதம் சரிவும் பதிவாகியிருந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+