பாதுகாப்பு துறையை சேர்ந்த நிறுவனம் டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) லிமிடெட். இந்நிறுவனம் பாதுகாப்பு மற்றும வான்வெளி மின்னணு தீர்வுகள் வழங்கும் நிறுவனமாகும். COTS Boards, ATE மற்றும் Test systems உள்ளிட்டவைகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்மையில் பாகிஸ்தானின் விமான தளங்களை தாக்க இந்திய ராணுவம் பயன்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணைக்கும் இந்த நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
டிஆர்டிஓ
டிஆர்டிஓ மற்றும் பிரம்மோஸின் உள்ளீடு மற்றும் ஆதரவுடன் பிரம்மோஸ் ஏவுகணை செக்அவுட் உபகரணத்தை டேட்டா பேட்டர்ன்ஸ் உருவாக்கியது. இந்த உபகரணம் ஏவுகணையின் umbilical மற்றும் பராமரிப்பு இணைப்புகளுடன் இடைமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்திறனை முழுமையாக மதிப்பிடுகிறது. பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

மும்பை பங்குச் சந்தையின் வலைதள தரவுகளின்படி, டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) நிறுவனம் 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.519.80 கோடி ஈட்டியுள்ளது. அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.181.69 கோடி ஈட்டியது. கடந்த 2024-25ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.117.04 கோடியும், நிகர லாபமாக ரூ.44.66 கோடியும் ஈட்டியுள்ளது.
சரிவு
கடந்த மார்ச் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1.350.50க்கு சென்றது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.2,920ஐ எட்டியது. ஆக சுமார் 3 மாதங்களுக்குள் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 116 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 279 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 72.45 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.2,845.75ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.15,932 கோடியாக உள்ளது.
வாங்கலாம்
தரகு நிறுவனமான நுவாமா, டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) நிறுவன பங்குக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.3,700ஆக நிர்ணயம் செய்துள்ளது. இது இந்நிறுவன பங்கின் இதுவரை இல்லாத உச்சவிலையை காட்டிலும் அதிகமாகும். 2024 ஜூலை 5ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சவிலையான ரூ.3,654.75ஐ எட்டியது.
தங்க நகைகள் சுத்தமானதா, டூப்ளிகேட்டான்னு கண்டுபிடிக்க சூப்பர் வழி.. இனி இதை ட்ரை பண்ணி பாருங்க.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications