ஐடி துறையை சேர்ந்த நிறுவனம் டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட். தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஒரு காலத்தல் பென்னி பங்காக இருந்த டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.18.31 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 40.19 சதவீதம் அதிகமாகும். 2023 டிசம்பர் காலாண்டில் டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.13.06 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

2024 டிசம்பர் காலாண்டில் டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.308.92 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 36.25 சதவீதம் அதிகமாகும். 2023 டிசம்பர் காலாண்டில் டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் நிகர வருவாய் ரூ.226.74 கோடியாக இருந்தது.
கடந்த டிசம்பர் காலாண்டில் டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் ரூ.14.40ஆக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டில் ரூ.10.29ஆக இருந்தது. வலுவான லாபம் மற்றும் பங்குதாரர் மதிப்பு வளர்ச்சி அடைந்துள்ளதை ஒரு பங்கு வருமானம் அதிகரிப்பு வெளிப்படுத்துகிறது.
டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2024 மே மாதத்தில் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை வெறும் ரூ.2.50ஆக இருந்தது. ஆனால் மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,181ஆக இருந்தது. ஆக, கடந்த 11 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 46,740 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், ஒருவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு இப்பங்கில் ரூ.1லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.4.72 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 5,861 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குறுகிய கால அடிப்படையில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது.
உதாரணமாக கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 12 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. கடந்த 6 மாதத்தில் பங்கின் விலை 4 சதவீதம் சரிவு கண்டது. இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 19.30 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் ரூ.1,440 என்ற விலையிலிரு்து தற்போதை விலைக்கு சரிவு கண்டுள்ளது.
தங்கத்தில் முதலீடு: எப்போதும் மனைவிதான் புத்திசாலிங்க.. பாராட்டும் ஹர்ஷ் கோயங்கா
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications