இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சில நேரங்களில் நம் வீட்டு பெண்கள் தங்க நகை எடுக்கும் போது இப்போ இது தேவையா என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இப்போ தங்கத்தின் விலை பார்க்கும்போது, நல்ல வேளை அன்னைக்கே அவள் (மனைவி) தங்கத்தை வாங்கி வைச்சா என்ற ஒரு விதமான நிதி பாதுகாப்பு எண்ணம் நமக்கு ஏற்பட்டு இருக்கும்.
சாமானிய நடுத்தர கணவர்கள் மட்டுமல்ல பெரிய தொழிலதிபர்களும் பெண்கள் தங்கம் சேமிப்பதை பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்டில் பிரபல தொழிலதிபர் இடம் பிடித்துள்ளார். உள்கட்டமைப்பு, டயர் மற்றும் ஐடி உள்பட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஆர்பிஜி எண்டர்பிரைசஸ். இந்நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா.

இவர் தனது சமூக வலைதளமான எக்ஸில், தான் கார் வாங்கியதையும், மனைவி தங்கம் வாங்கியதையும் ஒப்பிட்டு, எப்போதும் மனைவிகள் தான் புத்திசாலிங்க என்று யதார்த்தமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பதிவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரூ.8 லட்சத்தில் ஒரு கார் வாங்கினேன். ஆனால் என் மனைவி அப்போது ரூ.8 லட்சத்துக்கு தங்கம் வாங்கினாள்.
இன்று நான் வாங்கிய காரின் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆனால் அவள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம். இடையில் நான் தங்கம் வாங்குவதை தவிர்த்து விட்டு அந்த பணத்தை வைத்து சுற்றுலாவுக்கு செல்வோமா? என்று என் மனைவியிடம் கேட்டேன். ஆனால் அவள் சுற்றுலா 5 நாட்கள் நீடிக்கும், தங்கம் 5 தலைமுறைகள் நீடிக்கும் என்றாள்.
நான் ரூ.1 லட்சத்துக்கு போன் வாங்கினேன். அவள் அதே மதிப்புக்கு தங்கம் வாங்கினாள். இப்போது அந்த செல்போனின் மதிப்பு ரூ.8 ஆயிரம். ஆனால் அவளுடைய தங்கத்தின் மதிப்பு ரூ.2 லட்சம். நீதி: மனைவிகள் புத்திசாலிகள் என்று பதிவு செய்து இருந்தார்.
அண்மையில் கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குனருமான உதய் கோடக், இந்திய இல்லத்தரசிகளை புத்திசாலித்தனமான நிதி மேலாளர்கள் என்று பாராட்டி இருந்தார். உதய் கோடக் தனது எக்ஸ் பக்கத்தில், காலப்போக்கில் தங்கத்தின் செயல்திறன், இந்திய இல்லத்தரசிகள் உலகிலேயே புத்திசாலியான நிதி மேலாளர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
முதலீடு மூலம் பொருளாதார நடவடிக்கைகளை தூண்டுதல் மற்றும் பொருளாதாரத்தை தூண்டுவதற்காக வருவாயை காட்டிலும் அதிகமாக செலவினங்களை ஆதரிக்கும் அரசாங்கங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள், என்றென்றும் தங்க இறக்குமதியாளராக இருக்கும் இந்தியாவை பார்த்து கற்க வேண்டியது இருக்கலாம் என்று பதிவு செய்து இருந்தார்.
அசால்டா அடிச்சு தூள் கிளப்பும் ஐசிஐசிஐ வங்கி... அதிர்ச்சியில் எச்டிஎஃப்சி வங்கி
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications