பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று பொதுவாக சொல்வார்கள். அதேசமயம் பங்குச் சந்தையில் பலர் குறுகிய காலத்தில் குறைந்த முதலீட்டில் பல மடங்கு லாபமும் பார்த்துள்ளனர். சில பங்குகள் எதிர்பாராத வகையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்து வருகின்றன. அதற்கு உதாரணமாக ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் பங்கு நிலவரத்தை சொல்லலாம்.
ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்கட்டமைப்பு துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் இபிசி (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) ஒப்பந்தக்காரராக மேம்பட்ட நிபுணத்துவம் பெற்றது. மேலும், ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சாலை கட்டுமானம், பாலங்கள் மற்றும் பிற சிவில் பொறியியல் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களை எடுத்து செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது புதிதாக புதுப்பிக்கத்தக்க எனர்ஜி வணிகத்தில் களம் இறங்கியுள்ளது.

இந்நிறுவனம் ஹஸூர் நியூ & ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை தொடங்கி புதுப்பிக்கத்தக்க எனர்ஜி வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. மேலும் முதலீட்டாளர்களுக்கு மல்டி பேக்கர் ஆதாயத்தை கொடுத்த மல்டிபேக்கர் பங்குகளில் இந்நிறுவன பங்கும் ஒன்றாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 34,000 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது. 2020 ஏப்ரல் 15ம் தேதியன்று வெறும் 13 காசுகளாக இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.44.65ஆக அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவ பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.3.4 கோடியாக பெருகியிருக்கும்.
கடந்த வியாழக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது, ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் குறைந்து ரூ.44.65ஆக இருந்தது. கடந்த 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.32.00க்கு சென்றது. தற்போது இப்பங்கின் விலை அதன் குறைந்தபட்ச விலையை காட்டிலும் சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.
மும்பை பங்குச் சந்தை தரவுகளின்படி, ஹஸூர் மல்டி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.56.76 கோடி ஈட்டியுள்ளது. அதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.3.14 கோடி ஈட்டியுள்ளது.
Zepto, Blinkit உடன் தாக்குபிடிக்க முடியாத அண்ணாச்சி கடைகள்..! இனி என்னவெல்லாம் நடக்குமோ?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications