மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் பணத்தை பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். நிறுவன பங்குகளை நல்ல ஆய்வு செய்து நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ள நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு தங்களது முதலீட்டு யுக்தியை மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் மாற்றி கொள்ளும். இதனால் மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் வருவாய் ஈட்டும் திறன் அதிகரிக்கும், பெரிய இழப்புகள் தவிரிக்கப்படும்.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அதானி குழுத்தை சேர்ந்த 5 நிறுவன பங்குகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன. ETMutualFunds தரவுகளின்படி, மாதாந்திர அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளன அதேசமயம் ஐந்து நிறுவனங்களில் முதலீட்டை குறைத்துள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் ஏடபுள்யூஎல் அக்ரி பிசினஸ் ஆகிய 5 நிறுவன பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. அதேசமயம், அதானி டோட்டல் கேஸ், சங்கி இண்டஸ்ட்ரீஸ், ஏசிசி, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன். அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய பங்குகளில் முதலீட்டை குறைத்துள்ளன.
கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வசம் உள்ள அதானி கிரீன் எனர்ஜி பங்குகளின் எண்ணிக்கை 1.63 கோடியாக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி இறுதியில் 76.35 லட்சம் பங்குகளாக இருந்தது. ஆக கடந்த மாதத்தில் இந்நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பங்குகள் எண்ணிக்கை 114.51 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸின் பங்குகள் 22.35 சதவீதமும், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 7.31 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஏடபுள்யூஎல் அக்ரி பிசினஸ் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முறையே 1.18 சதவீதம் மற்றும் 0.74 சதவீதம் பங்குகளை அதிகரித்துள்ளன.
அதேசமயம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடந்த மாதம் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் பங்கு மூலதனத்தை 45.67 சதவீதம் குறைந்து 22.29 லட்சம் பங்குகளாக குறைத்துள்ளன. இது முந்தைய பிப்ரவரி மாத இறுதியில் 41.03 லட்ச பங்குகளாக இருந்தது. சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பங்குகளை 26.46 சதவீதமும், அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் 0.40 சதவீதமும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குகளை குறைத்துள்ளன.
ஐடி நிறுவன பங்குகளை கை கழுவும் FII முதலீட்டாளர்கள்.. மார்ச் 31ல் நடந்தது என்ன..? மக்களே உஷார்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications