ஜவுளித் துறையை சேர்ந்த நிறுவனம் நந்தன் டெனிம் லிமிடெட். மைக்ரோ கேப் நிறுவனமான நந்தன் டெனிம் லிமிடெட் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவன பங்கின் விலை ரூ.5க்கும் குறைவது என்பது குறிப்பிடத்தக்கது.
லாபம்
நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.1,048.65 கோடி ஈட்டியுள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.579.12 கோடி ஈட்டியிருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.10.63 கோடி ஈட்டியுள்ளது.

2024-25ம் நிதியாண்டில் நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவனம் நிகர வருவாயாக ரூ.3,546.68 கோடி ஈட்டியுள்ளது. மேலும் நிகர லாபமாக ரூ.33.48 கோடி ஈட்டியுள்ளது. இந்நிறுவன பங்கு நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. உதாரணமாக கடந்த 5 ஆண்டுகளில் நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 755 சதவீதம் பெருக்கியுள்ளது.
2 ஆண்டுகள்
கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 92 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவன பங்கு குறுகிய கால அடிப்படையில் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை. கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை வெறும் 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.71 சதவீதம் குறைந்து ரூ.4.02ஆக இருந்தது. கடந்த மார்ச் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.2.96க்கு சென்றது.
2025 மார்ச் இறுதி நிலவரப்படி, நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் வசம் 51 சதவீத பங்குகள் உள்ளன. அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் மொத்தம் 2 சதவீத பங்குகள் உள்ளன. எஞசிய பங்குகள் நிறுவன முதலீட்டாளர்கள் அல்லாதவர்களிடம் உள்ளது.
போனஸ் பங்கு
நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவன 2022 மார்ச் மாதத்தில் தனது பங்குதாரர்களுக்கு 2:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வெளியிட்டது. 2024 செப்டம்பரில் இந்நிறுவனம் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது 10:1 என்ற விகிதத்தல் ஒரு பங்கை பத்து பங்குகளாக நந்தன் டெனிம் லிமிடெட் நிறுவன பிரித்தது.
டோலி கன்னா முதல் முகுல் அகர்வால் வரை.. தேடி பிடித்து முதலீடு செய்த பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications