டோலி கன்னா முதல் முகுல் அகர்வால் வரை.. தேடி பிடித்து முதலீடு செய்த பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா..?

பங்குச் சந்தையின் பிரபலமான முதலீட்டாளர்களில் ஆஷிஷ் கச்சோலியா, டோலி கன்னா, முகுல் அகர்வால் மற்றும் விஜய் கேடியா ஆகியோர் முக்கியமான நபர்கள். சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது, எந்ததுறையை சார்ந்த பங்குகள் முதலீட்டு ஏற்றது போன்றவற்றை தெரிந்து கொள்ளுவதற்காக சில்லரை மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள், பிரபல முதலீட்டாளர்களின் முதலீட்டு நடவடிக்கைகளை முன்னிப்பாக கவனிக்கின்றனர்.

தற்போது டோலி கன்னா, ஆஷிஷ் கச்சோலியா போன்ற பிரபல முதலீ்ட்டாளர்கள் கடந்த மார்ச் காலாண்டில் மேற்கொண்ட முதலீட்டு நடவடிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. முகுல் அகர்வால் உள்ளிட்ட சில முதலீட்டாளர்கள் புதிதாக சில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர் அதேசமயம் சில நிறுவன பங்குகளை முழுமையாக விற்று விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

டோலி கன்னா முதல் முகுல் அகர்வால் வரை..  தேடி பிடித்து முதலீடு செய்த பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா..?

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மற்றும் கூட்டாளிகள்
மறைந்த முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் எஸ்டேட், சன்பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் நிறுவனத்தில் கைவசம் இருந்த அனைத்து பங்குகளையும் விற்று விட்டு வெளியேறியது.

முகுல் அகர்வால்
முகுல் அகர்வால் கடந்த மார்ச் காலாண்டில், ஒன்சோர்ஸ் ஸ்பெஷாலிட்டி பார்மா மற்றும் ஜக்சன்பால் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்களில் புதிதாக முதலீடு செய்துள்ளார். நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஒன்சோர்ஸ் ஸ்பெஷாலிட்டி பார்மா பங்கின் விலை ரூ.1,688.20ஆக இருந்தது. பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஜாக்சன்பால் பார்மாசூட்டிக்கல்ஸ் பங்கின் விலை ரூ.209.50ஆக இருந்தது.

அதேகாலாண்டில் முகுல் அகர்வால், எதோஸ், டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, குயின் ஹீல் டெக்னாலஜிஸ், சர்தா எனர்ஜி அண்ட் மினரல்ஸ், ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சியட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்று விட்டு வெளியேறினார்.
அனில் கோயல்
2025 மார்ச் காலாண்டில் அனில் கோயல் புதிதாக நஹர் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனததை தனது போர்ட்ஃபோலியாவில் சேர்ததுள்ளார்.மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் நஹர் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்கின் விலை ரூ.286.65ஆக இருந்தது.
அதே காலாண்டில் தனது கைவசம் இருந்த எல்ஜி பாலகிருஷ்ணன் அண்ட் பிரதர்ஸ் நிறுவன பங்குகளை விற்று விட்டு அவர் வெளியேறினார்.

ஆஷிஷ் கச்சோலியா
ஆஷிஷ் கச்சோலியாவின் போர்ட்ஃபோலியாவில் கடந்த மார்ச் காலாண்டில் எந்த மாற்றங்களும் பதிவாகவில்லை. அதாவது அவர் புதிதாக எந்தவொரு நிறுவனத்திலும் முதலீடு செய்யவில்லை அதேபோல் எந்தவொரு நிறுவன பங்கிலிருந்தும் வெளியேறவில்லை.

விஜய் கேடியா
2025 மார்ச் காலாண்டில் விஜய் கேடியா புதிதாக எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. அதேபோல் தனது போர்ட்ஃபோலியாவில் உள்ள எந்த நிறுவன பங்குகளையும் அவர் கழிக்கவில்லை.

டோலி கன்னா
டோலி கன்னா கடந்த மார்ச் காலாண்டில் தனது போர்ட்ஃபோலியாவில் புதிதாக பாலிப்ளெக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை இணைத்துள்ளார். கடந்த காலாண்டில்தான் இந்நிறுவனத்தில் புதிதாக முதலீடு செய்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் பாலிப்ளெக்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.1,339.75ஆக இருந்தது.

கிரே மார்க்கெட்டில் எகிறும் பிரீமியம்.. மே 26ம் தேதி பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஒதுக்கீடு..
அதே காலாண்டில் டோலி கன்னா தனது கைவசம் இருந்த செலான் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜி மற்றும் இந்தியன் மெட்டல்ஸ் அண்ட் ஃபெரோ அலாய்ஸ் நிறுவன பங்குகளை முழுமையாக விற்று விட்டு வெளியேறி விட்டார்.

3 ஆண்டுகளில் 1,000 சதவீதத்துக்கு மேல் லாபம்..!! இந்த 11 மல்டிபேக்கர் பங்குகள் உங்களிடம் இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+