கடந்த 3 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 50 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த வலுவான சந்தை ஏற்றத்துக்கு மத்தியில் பல நிறுவன பங்குகள் அசாரண வருமானத்தை அளித்துள்ளன. அந்த வகையில், ரூ.10,000 கோடிக்கு அதிகமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 1,000 சதவீதத்துக்கு மேல் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்த 11 சிறந்த பங்குகள் அடையாளம் காண்ப்பட்டுள்ளது. அந்த பங்குகள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
டிரான்ஸ்ஃபார்மஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் (இந்தியா)
நாட்டின் முன்னணி டிரான்ஸ்ஃபார்மர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டிரான்ஸ்பார்மஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் (இந்தியா). கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 3,201 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.15லிருந்து ரூ.508ஆக உயர்ந்துள்ளது. இப்பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.650ஆக இருந்தது.

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்
இந்திய கடற்படைக்கு போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் நிறுவனம் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ். கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,258 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இதே காலத்தில் இப்பங்கின் விலை ரூ.148லிருந்து ரூ.3,500ஆக உயர்ந்துள்ளது. இப்பங்கின் விலை 52 வார அதிகபட்ச விலை ரூ.3,737ஆக இருந்தது.
ஐனாக்ஸ் விண்ட் எனர்ஜி
ஐனாக்ஸ் விண்ட் எனர்ஜி லிமிடெட் காற்றாலை மின்சார உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 1,745 சதவீதம் பெருக்கியுள்ளது. இதே காலத்தில் இப்பங்கின் விலை ரூ.577லிருந்து ரூ.10,641ஆக உயர்ந்துள்ளது. இப்பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.14,000ஆக உள்ளது.
ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா
ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா நிறுவனம் மின்சார பகிர்மானம் மற்றும் விநியோகம் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,703 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. இதே காலத்தில் இப்பங்கின் விலை ரூ.102லிருந்து ரூ.1,860ஆக அதிகரித்துள்ளது. இப்பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.2,216ஆக உள்ளது.
வாரீ ரீனியூவபிள்ஸ் டெக்னாலஜிஸ்
வாரீ ரீனியூவபிள்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,417 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.67லிருந்து ரூ.1,016ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவன பங்கின் 52 வார உச்சபட்ச விலை ரூ.2,513 ஆகும்.
ஆதம் இன்வெஸ்ட்மென்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஆதம் இன்வெஸ்ட்மென்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர், பங்குகளில் முதலீடு போன்ற முதலீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு 1,292 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இதே காலத்தில் இப்பங்கின் விலை ரூ.158லிருந்து ரூ.2,199ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவன பங்கின் 52 வார உச்சபட்ச விலை ரூ.2,278ஆக உள்ளது.
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்
பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், திட்ட செயல்படுத்துதல் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமான பிரிவாக செயல்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் முதலீட்டை 1,173 சதவீதம் பெருக்கியுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.32லிருந்து ரூ.405ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவன பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.647ஆக உள்ளது.
ஏபிஏஆா் இண்டஸ்ட்ரீஸ்
உலகின் 3வது பெரிய டிரான்ஸ்ஃபார்மர் ஆயில் தயாரிப்பு நிறுவனம் ஏபிஏஆர் இண்டஸ்ட்ரீஸ். கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,114 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இப்பங்கின் விலை ரூ.631லிருந்து ரூ.7,656ஆக உயர்ந்துள்ளது. இந்நிறுவன பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.11,797ஆகும்.
கொச்சின் ஷிப்யார்டு
கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து வகையான கப்பல்கள் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.162லிருந்து ரூ.1,904ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவன பங்கு முதலீடடாளர்களுக்கு 1,075 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவன பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.2,977ஆக உள்ளது.
பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட்
பிஜி எலக்ட்ரோபிளாஸ் நிறுவனம், இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கான பல்வகைப்பட்ட மின்னணு உற்பத்தி சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,021 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவன பங்கு ரூ.67லிருந்து ரூ.756ஆக உயர்ந்துள்ளது. இப்பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.1.055ஆக உள்ளது.
ஜென் டெக்னாலஜிஸ்
ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்சார்கள் மற்றும் சிமுலேட்டர்கள் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு பயிற்சி அமைப்புகளை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,004 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இப்பங்கின் விலை ரூ.171லிருந்து ரூ.1,887ஆக உயர்ந்தது. இப்பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.2,628ஆகும்.
கிரே மார்க்கெட்டில் எகிறும் பிரீமியம்.. மே 26ம் தேதி பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஒதுக்கீடு..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications