நார்த் ஈஸ்டர்ன் கேரியிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்இசிசி) லாஜிஸ்டிக்ஸ் தீர்வு வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து, சர்வதேச சரக்கு போக்குவரத்து, வணிக பொருட்கள் போக்குவரத்து சேவைகள், தொழில்துறை சரக்குகள் போக்குவரத்து மற்றும் கிடங்கு சேவைகளில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
லாபம்
என்இசிசி நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1.76 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38.4 சதவீதம் குறைவாகும். 2023-24ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2.8 கோடி ஈட்டியிருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயும் குறைந்துள்ளது.

2025 மார்ச் காலாண்டில் என்இசிசி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.88.09 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் என்இசிசி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.91.8 கோடி ஈட்டியிருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் என்இசிசி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.20 சதவீதம் குறைந்து ரூ.24.50ஆக இருந்தது.
மல்டிபேக்கர்
என்இசிசி பங்கு விலை ரூ.25க்கும் குறைவாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 450 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 தினங்களில் இப்பங்கின் விலை 4.05 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இருப்பினும், 2025ம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் ஸ்மால்கேப் நிறுவனமான இப்பங்கின் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. 2024 ஜூலை 23ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே என்இசிசி நிறுவன பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.44.40ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த மார்ச் 4ம் தேதியன்று இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.18.10க்கு சென்றது. தற்போது இப்பங்கின் விலை அதன் 55 வார உச்சவிலையிலிருந்து சுமார் 45 சதவீதம் குறைவாக உள்ளது.
கிளைகள்
என்இசிசி நிறுவனம் இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் சுமார் 300 கிளைகளையும், பூட்டான் மற்றும் வங்கதேசத்தில் செயல்பாட்டு அமைப்புகளையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஆன்லைன் சரக்கு கண்காணிப்பு அமைப்பு வாடிக்கையாளர்கள் தங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஆன்லைனில் கண்காணிக்க அனுமதிக்கிறது.
ரிசர்வ் வங்கி எப்படி வருமானம் ஈட்டுக்கிறது தெரியுமா..? அரசுக்கு அள்ளி கொடுக்க இதுதான் காரணம்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications