இந்திய ரிசர்வ் வங்கி தனது உபரி பணத்தை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்கி வருகிறது. டாலர் உள்பட் அன்னிய செலாவணி இருப்புகளில் முதலீடுகள் மற்றும் மதிப்பீட்டு மாற்றங்களிலிருந்து கிடைக்கும் உபரி வருமானம் மற்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் கிடைக்கும் கட்டணங்களிலிருந்து ரிசர்வ் வங்கி, அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு தொகையை வழங்குகிறது.
கடந்த சில நிதியாண்டுகளாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கொடுக்கும் டிவிடெண்டு தொகையை அதிகரித்து வருகிறது. கடந்த 2024-25 நிதியாண்டுக்கு டிவிடெண்டாக ரூ.2.69 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். மேலும், இது இதுவரை இல்லாத அதிகபட்ச டிவிடெண்டாகும்.

கடந்த நிதியாண்டில் அன்னிய செலாவணி பரிவர்த்தனை வாயிலான லாபம் மற்றும் வெளிநாட்டு பத்திரங்கள் வாயிலாக கிடைக்கும் வட்டி வருமானம் ஆகியவை அதிகமாக கிடைத்தால் இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு டிவிடெண்டு அறிவித்துள்ளது.
கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி பரிவர்த்தனை மூலம் ரூ.11.1 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது 2023-24ம் நிதியாண்டில் ரூ.8.36 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெளிநாட்டு பத்திரங்கள் வாயிலாக கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.9.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.6.53 லட்சம் கோடியாக இருந்தது.
பிற ஆசிய மத்திய வங்கிகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் அன்னிய செலாவணி கையிருப்புகளை விற்பனை செய்ததில் இந்திய ரிசர்வ் வங்கி முதலிடத்தில் இருந்தது. 2நொமுரா மற்றும் டிபிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மதிப்பீடுகளின்படி. 2024 செப்டம்பரில் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு 70,400 கோடி டாலரை எட்டியது. அதுமுதல் ரிசர்வ் வங்கி 12,500 கோடி டாலர் மதிப்புக்கும் அதிகமாக அன்னிய செலாவணியை விற்பன செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் வாரியம் அதன் எதிர்பாராத தற்செயல் ஆபத்து பஃபரை (சிஆர்பி) தொடர்ந்து உயர்த்தி வருகிறது.2024-25ம் நிதியாண்டில் சிஆர்பியை 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது வாராக் கடன்கள், வீழ்ச்சியடைந்து வரும் சொதது மதிப்புகள். ஊழியர்களின் செலவுகள் அல்லது எதிர்பாராத பொருளாதார எதிர்மறையான நிகழ்வுகள் போன்ற சாத்தியமான பாதிப்புகளை சமாளிக்க இது உதவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி சிஆர்பியை 2023-24ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக உயர்த்தியது.
ரிசர்வ் வங்கி வழங்கும் டிவிடெண்டு, மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும். மேலும் அரசாங்கத்தின் செலவுகள் வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். எதிர்வரும் ஜூலை தொடக்கத்தில் இருந்து பணப்புழக்கம் தெரியும் எ்னறு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications